• Jan 04 2025

திருகோணமலை விபத்தில் பத்து பேர் படுகாயம்

Chithra / Dec 29th 2024, 7:39 am
image

  


திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் பாலத்தில் வைத்து வேனும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற இச்சம்பவமானது திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு வேனில் பயணித்த ஐவரும், 

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி காரில் பயணித்த ஐவருமாக 10 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


திருகோணமலை விபத்தில் பத்து பேர் படுகாயம்   திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் பாலத்தில் வைத்து வேனும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற இச்சம்பவமானது திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தில் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு வேனில் பயணித்த ஐவரும், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி காரில் பயணித்த ஐவருமாக 10 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement