• Apr 04 2025

கடந்த வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் பதிவு...!

Sharmi / Feb 15th 2024, 1:38 pm
image

கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகள், சிறுமிகளை வன்கொடுமை செய்தமை தொடர்பான 51 முறைப்பாடுகள், சிறுவர்களை ஆபாசமாக பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சிறுவர்களை போதைப்பொருள் கடத்தல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறையால் ஒடுக்குதல், புறக்கணித்தல், கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7,466 முறைப்பாடுகள் கிடைத்திருந்தபோதிலும்  இந்த முறைப்பாடுகள் 2023 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளன.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது 

மேலும், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக தற்போதுள்ள சில சட்டங்களை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுவருகின்றன  என  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் பதிவு. கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகள், சிறுமிகளை வன்கொடுமை செய்தமை தொடர்பான 51 முறைப்பாடுகள், சிறுவர்களை ஆபாசமாக பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக சிறுவர்களை போதைப்பொருள் கடத்தல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறையால் ஒடுக்குதல், புறக்கணித்தல், கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7,466 முறைப்பாடுகள் கிடைத்திருந்தபோதிலும்  இந்த முறைப்பாடுகள் 2023 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளன.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக தற்போதுள்ள சில சட்டங்களை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுவருகின்றன  என  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now