• Sep 20 2024

10 ஆயிரத்து 355 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் - அரசு வெளியிட்ட அறிவிப்பு.! samugammedia

Tamil nila / Jun 29th 2023, 6:00 pm
image

Advertisement

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற 10 ஆயிரத்து 355 ஊழியர்களின் சேவைகளை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவித்துள்ளார்.

இந்த ஊழியர்களில் தற்காலிக ஒப்பந்தம் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் உள்ளடங்குவதாகவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்களின் பணிகளை நிரந்தரமாக்குமாறு நீண்ட காலமாக தற்காலிக பணியாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாகவும் ஜனக வக்கம்புர குறிப்பிட்டார்.

எனவே உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட நிலையில் இந்த சாதாரண பணியாளர்கள் ஆற்றிய பணியை கருத்தில் கொண்டு அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் 330 உள்ளூராட்சி அமைப்புகள் இயங்கி வருகின்ற நிலையில் இதில் 18 மாநகர சபைகள், 42 மாநகர சபைகள் மற்றும் 270 பிராந்திய சபைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

10 ஆயிரத்து 355 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் - அரசு வெளியிட்ட அறிவிப்பு. samugammedia உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற 10 ஆயிரத்து 355 ஊழியர்களின் சேவைகளை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவித்துள்ளார்.இந்த ஊழியர்களில் தற்காலிக ஒப்பந்தம் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் உள்ளடங்குவதாகவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.தங்களின் பணிகளை நிரந்தரமாக்குமாறு நீண்ட காலமாக தற்காலிக பணியாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாகவும் ஜனக வக்கம்புர குறிப்பிட்டார்.எனவே உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட நிலையில் இந்த சாதாரண பணியாளர்கள் ஆற்றிய பணியை கருத்தில் கொண்டு அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.இதேவேளை இலங்கையில் 330 உள்ளூராட்சி அமைப்புகள் இயங்கி வருகின்ற நிலையில் இதில் 18 மாநகர சபைகள், 42 மாநகர சபைகள் மற்றும் 270 பிராந்திய சபைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement