நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் சுற்றித் திரிந்து அங்கு வரும் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூல் செய்து வந்த 11 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனக பிரியதர்சன விதானகேவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கு பணம் தேடும் நோக்கில் இந்த இடத்தில் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டிக்கு வெளியில் உள்ள மனீன் நகரை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அரச திணைக்களத்திற்கு அருகில் சுற்றித் திரிந்த 11 பேர் கைது. வெளியான காரணம்.samugammedia நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் சுற்றித் திரிந்து அங்கு வரும் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூல் செய்து வந்த 11 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனக பிரியதர்சன விதானகேவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கு பணம் தேடும் நோக்கில் இந்த இடத்தில் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டிக்கு வெளியில் உள்ள மனீன் நகரை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.