நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் உள்ள ரப்தி ஆற்றில் பயணிகள் பஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இந்த விபத்தில் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை (12) இரவு சுமார் 11:30 மணியளவில், நேபால்கஞ்சிலிருந்து காத்மாண்டு நோக்கிச் சென்ற குறித்த பஸ், பாலுபாங்கில் உள்ள ராப்தி பாலத்திலிருந்து விலகி கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சனிக்கிழமை (13) அதிகாலை 1 மணி நிலவரப்படி, ஐந்து பயணிகள் சிகிச்சையின் போது உயிரிழந்தனர், மேலும் ஏழு பேரின் உடல்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கோஹல்பூரில் உள்ள நேபாள்கஞ்ச் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் நேபாள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு , பலர் காயம். நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் உள்ள ரப்தி ஆற்றில் பயணிகள் பஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த இந்த விபத்தில் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை (12) இரவு சுமார் 11:30 மணியளவில், நேபால்கஞ்சிலிருந்து காத்மாண்டு நோக்கிச் சென்ற குறித்த பஸ், பாலுபாங்கில் உள்ள ராப்தி பாலத்திலிருந்து விலகி கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சனிக்கிழமை (13) அதிகாலை 1 மணி நிலவரப்படி, ஐந்து பயணிகள் சிகிச்சையின் போது உயிரிழந்தனர், மேலும் ஏழு பேரின் உடல்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கோஹல்பூரில் உள்ள நேபாள்கஞ்ச் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.குறிப்பாக விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் நேபாள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.