• Nov 21 2024

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டி20: இந்தூர் சென்றடைந்த கோலி..!!

Tamil nila / Jan 13th 2024, 10:37 pm
image

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மொகாலியில் மோதிய முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணி மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் விளையாடாத விராட்கோலி 2 ஆவது போட்டிக்கு அணிக்கு திரும்பி உள்ளார். அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலி 427 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கோலி கடைசியாக 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.

இந்திய அணி பெட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளதால் நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டி20: இந்தூர் சென்றடைந்த கோலி. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மொகாலியில் மோதிய முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரு அணி மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.இந்நிலையில் முதல் ஆட்டத்தில் விளையாடாத விராட்கோலி 2 ஆவது போட்டிக்கு அணிக்கு திரும்பி உள்ளார். அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலி 427 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கோலி கடைசியாக 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.இந்திய அணி பெட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளதால் நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement