• Mar 17 2025

யாழில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம்!

Chithra / Mar 17th 2025, 7:38 am
image

 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளன.

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எழு கட்டுப்பணமும், வல்வெட்டித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், பருத்தித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், சாவகச்சேரி நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், 

காரைநகர் பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு ஐந்து கட்டுப்பணமும்,நெடுந்தீவு பிரதேச சபைக்கு ஐந்து கட்டுப்பணமும்,வேலணை பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளன.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு ஒன்பது கட்டுப்பணமும், சாவகச்சேரி பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், நல்லூர் பிரதேச சபைக்கு ஆறு கட்டுப்பணமும் என மொத்தமாக 123 கட்டுப்பணம் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தின.

தமிழ் மக்கள் கூட்டணி இதுவரை 14 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியதுடன் வல்வெட்டித்துறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி எட்டு உள்ளூராட்சி சபைகளிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தின. சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் காரைநகர் பிரதேச சபையில் போட்டியிட சோசலிச சமத்துவக் கட்சியும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

யாழில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம்  எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளன.வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எழு கட்டுப்பணமும், வல்வெட்டித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், பருத்தித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், சாவகச்சேரி நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், காரைநகர் பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு ஐந்து கட்டுப்பணமும்,நெடுந்தீவு பிரதேச சபைக்கு ஐந்து கட்டுப்பணமும்,வேலணை பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளன.வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு ஒன்பது கட்டுப்பணமும், சாவகச்சேரி பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், நல்லூர் பிரதேச சபைக்கு ஆறு கட்டுப்பணமும் என மொத்தமாக 123 கட்டுப்பணம் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளன.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தின.தமிழ் மக்கள் கூட்டணி இதுவரை 14 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியதுடன் வல்வெட்டித்துறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தவில்லை.ஐக்கிய மக்கள் சக்தி எட்டு உள்ளூராட்சி சபைகளிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தின. சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் காரைநகர் பிரதேச சபையில் போட்டியிட சோசலிச சமத்துவக் கட்சியும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement