• Mar 18 2025

ஒன்றரை வயது குழந்தையுடன் தீ வைத்துக் கொண்ட தாய்!

Chithra / Mar 17th 2025, 7:43 am
image

 

தம்புள்ளை கண்டலம பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக  3 பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கடுமையான தீக்காயங்களுக்குள்ளான குழந்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது அந்தப் பெண்ணின் 7 வயதும், 9 வயதுமுடைய இரு பிள்ளைகளும் பாடசாலைக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தீக்காயத்திற்குள்ளான பெண்ணுக்கும், கணவருக்கும் இடையில் ஏற்படும் தகராறின் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மன உளைச்சலுக்குள்ளாகியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

கடும் மன உளைச்சலின் காரணமாகவே தனது குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்ததாகக் காயமடைந்த பெண்  தெரிவித்துள்ளார். 

குறித்த பெண் தனது வீட்டிலுள்ள அறையில் இவ்வாறு உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளதாகவும் பின்னர் கணவர் குழந்தையின் உடலில் தீயை அணைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


ஒன்றரை வயது குழந்தையுடன் தீ வைத்துக் கொண்ட தாய்  தம்புள்ளை கண்டலம பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக  3 பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான தீக்காயங்களுக்குள்ளான குழந்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தின் போது அந்தப் பெண்ணின் 7 வயதும், 9 வயதுமுடைய இரு பிள்ளைகளும் பாடசாலைக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீக்காயத்திற்குள்ளான பெண்ணுக்கும், கணவருக்கும் இடையில் ஏற்படும் தகராறின் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மன உளைச்சலுக்குள்ளாகியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கடும் மன உளைச்சலின் காரணமாகவே தனது குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்ததாகக் காயமடைந்த பெண்  தெரிவித்துள்ளார். குறித்த பெண் தனது வீட்டிலுள்ள அறையில் இவ்வாறு உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளதாகவும் பின்னர் கணவர் குழந்தையின் உடலில் தீயை அணைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement