• Oct 31 2024

13 வயது சிறுமியை தகாத உறவுக்கு உட்படுத்திய இளைஞன்..! முல்லைத்தீவில் சம்பவம் samugammedia

Chithra / Nov 23rd 2023, 2:55 pm
image

Advertisement

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை தகாத உறவிற்கு உட்படுத்திய இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை சென்ற குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த 18ஆம் திகதி சிறுமியின் தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயாரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று முன்தினம் முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் சிறுமியையும் இளைஞனையும் கைது செய்துள்ளதுடன், 

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி தகாத உறவிற்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


13 வயது சிறுமியை தகாத உறவுக்கு உட்படுத்திய இளைஞன். முல்லைத்தீவில் சம்பவம் samugammedia  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை தகாத உறவிற்கு உட்படுத்திய இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.பாடசாலை சென்ற குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த 18ஆம் திகதி சிறுமியின் தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.சிறுமியின் தாயாரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று முன்தினம் முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் சிறுமியையும் இளைஞனையும் கைது செய்துள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி தகாத உறவிற்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement