• Nov 22 2024

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான ஆதரவு பெருகி வருகின்றது - பாரத் அருள்சாமி

Tharmini / Oct 27th 2024, 3:52 pm
image

கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளவும் எமது உரிமைசார் அரசியலை மேற்கொள்ளவும் பக்கபலமாக எமது ஒத்துழைப்பு பாரத் அருள்சாமிக்கு வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் தொழிற்சங்க தலைவர்களை கினிகத்தேனையில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

கடந்த காலங்களைப் போன்று சிறுபான்மை மக்களுடைய பிரதிநிதித்துவத்தை கண்டி மாவட்டத்தில் தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம் மக்களுடைய பூர்ண ஒத்துழைப்பையும் தான், வேட்பாளர் பாரத்துக்கு வழங்க உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட வேட்பாளருமான  ரஃப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி,  இரு பெரும் தலைமைகளின் ஆசிகளுடன்  நிச்சயம் கண்டி மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பிரதிநிதியாகும் மக்கள் ஆணையை நான் பெறுவேன் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் வேண்டியதில்லை. கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படும். இது விடயத்தில் மக்கள் உறுதியாகவுள்ளனர். எனக்கான அமோக ஆதரவை மக்கள் வழங்குவார்கள்.

 'பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான ஆதரவு பெருகி வருகின்றது. எதிர்க்கட்சியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தி சொன்னது ஒன்று, இன்று செய்வது வேறொன்று. இதனால் மக்கள் மத்தியில் திசைக்காட்டிக்கான ஆதரவு குறைந்து, ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

குறிப்பாக கண்டி மாவட்டத்திலும் எமது கூட்டணிக்கான ஆதரவு தளம் சிறந்த மட்டத்தில் உள்ளது. விசேடமாக கண்டி மாவட்டத்தில் இம்முறை தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் முடிவில் மக்கள் உள்ளனர். அதற்காக கறைபடியாத, மக்களைக் காட்டிக்கொடுக்காத, கல்வி பின்புலம்கொண்ட என்னை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளனர். பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் மக்கள் என்னிடம், அவர்களின் பேராதரவை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

நான் தனி நபர் கிடையாது, எனது பின்னால் மக்கள் உள்ளனர். அந்த மக்கள் சக்தியுடன் நிச்சயம் முன்னோக்கி செல்வேன். கண்டி மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் உறவுகளும் எனக்கான முழுமையான ஆதரவையும்  வழங்குவார்கள்.", என்றார்.



பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான ஆதரவு பெருகி வருகின்றது - பாரத் அருள்சாமி கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளவும் எமது உரிமைசார் அரசியலை மேற்கொள்ளவும் பக்கபலமாக எமது ஒத்துழைப்பு பாரத் அருள்சாமிக்கு வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தின் தொழிற்சங்க தலைவர்களை கினிகத்தேனையில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.கடந்த காலங்களைப் போன்று சிறுபான்மை மக்களுடைய பிரதிநிதித்துவத்தை கண்டி மாவட்டத்தில் தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம் மக்களுடைய பூர்ண ஒத்துழைப்பையும் தான், வேட்பாளர் பாரத்துக்கு வழங்க உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட வேட்பாளருமான  ரஃப் ஹக்கீம் தெரிவித்தார்.இதன் போது கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி,  இரு பெரும் தலைமைகளின் ஆசிகளுடன்  நிச்சயம் கண்டி மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பிரதிநிதியாகும் மக்கள் ஆணையை நான் பெறுவேன் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் வேண்டியதில்லை. கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படும். இது விடயத்தில் மக்கள் உறுதியாகவுள்ளனர். எனக்கான அமோக ஆதரவை மக்கள் வழங்குவார்கள். 'பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான ஆதரவு பெருகி வருகின்றது. எதிர்க்கட்சியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தி சொன்னது ஒன்று, இன்று செய்வது வேறொன்று. இதனால் மக்கள் மத்தியில் திசைக்காட்டிக்கான ஆதரவு குறைந்து, ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.குறிப்பாக கண்டி மாவட்டத்திலும் எமது கூட்டணிக்கான ஆதரவு தளம் சிறந்த மட்டத்தில் உள்ளது. விசேடமாக கண்டி மாவட்டத்தில் இம்முறை தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் முடிவில் மக்கள் உள்ளனர். அதற்காக கறைபடியாத, மக்களைக் காட்டிக்கொடுக்காத, கல்வி பின்புலம்கொண்ட என்னை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளனர். பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் மக்கள் என்னிடம், அவர்களின் பேராதரவை உறுதிப்படுத்தி வருகின்றனர்.நான் தனி நபர் கிடையாது, எனது பின்னால் மக்கள் உள்ளனர். அந்த மக்கள் சக்தியுடன் நிச்சயம் முன்னோக்கி செல்வேன். கண்டி மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் உறவுகளும் எனக்கான முழுமையான ஆதரவையும்  வழங்குவார்கள்.", என்றார்.

Advertisement

Advertisement

Advertisement