• Sep 20 2024

13 ஆவது திருத்தச்சட்டம் - புலனாய்வு பிரிவிடம் உதவி கோரும் மஹிந்த கட்சி உறுப்பினர்!

Tamil nila / Feb 12th 2023, 8:41 am
image

Advertisement

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு புலனாய்வு பிரிவிடம் மஹிந்த கட்சி உறுப்பினர் உதவி கோரியுள்ளனர்.


இதுவரைகாலமும் தடையாக இருந்த காரணி, தற்போதும் உள்ளதா என்று புலனாய்வு அமைப்புகள் ஊடாக ஜனாதிபதி ஆராய வேண்டும். 


அவ்வாறு இருந்தால் 13 இல் கைவைப்பதை நிறுத்த வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.  


மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த நல்லாட்சியில் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார். அப்போதுகூட 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு முற்படவில்லை. ஆகவே, 13 ஐ  முழுமையாக அமுல்படுத்த முடியாமல் இருப்பதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கக்கூடும்.  அது பற்றி ஜனாதிபதி தேடி பாருங்கள்.


தடையாக உள்ள காரணி தற்போதும் அப்படியே உள்ளது என புலனாய்வு அமைப்புகள்கூறினால், இந்த முயற்சியை ஜனாதிபதி கைவிட வேண்டும்.


சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் ஆதரிக்காது எனவும் சாகர குறிப்பிட்டார்.


13 ஆவது திருத்தச்சட்டம் - புலனாய்வு பிரிவிடம் உதவி கோரும் மஹிந்த கட்சி உறுப்பினர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு புலனாய்வு பிரிவிடம் மஹிந்த கட்சி உறுப்பினர் உதவி கோரியுள்ளனர்.இதுவரைகாலமும் தடையாக இருந்த காரணி, தற்போதும் உள்ளதா என்று புலனாய்வு அமைப்புகள் ஊடாக ஜனாதிபதி ஆராய வேண்டும். அவ்வாறு இருந்தால் 13 இல் கைவைப்பதை நிறுத்த வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த நல்லாட்சியில் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார். அப்போதுகூட 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு முற்படவில்லை. ஆகவே, 13 ஐ  முழுமையாக அமுல்படுத்த முடியாமல் இருப்பதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கக்கூடும்.  அது பற்றி ஜனாதிபதி தேடி பாருங்கள்.தடையாக உள்ள காரணி தற்போதும் அப்படியே உள்ளது என புலனாய்வு அமைப்புகள்கூறினால், இந்த முயற்சியை ஜனாதிபதி கைவிட வேண்டும்.சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் ஆதரிக்காது எனவும் சாகர குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement