• Nov 26 2024

நாட்டில் ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Chithra / Jun 14th 2024, 12:54 pm
image

 

நாட்டில் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதல்கள் மற்றும் விபத்துக்களால் கடந்த ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

அதில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 28 யானைகளும், மின்சாரம் தாக்கி 21 யானைகளும், ஹக்க பட்டாசுகளினால் 13 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 2 யானைகளும், 

ரயில் விபத்தால் 3 யானைகளும், வீதி விபத்தினால் ஒரு யானையும், 

நீரில் அடித்துச் சென்று 7 யானைகளும், ஏனைய விபத்துக்களால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் வயதுடையவை ஆகும். 

இதேவேளை, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அதிகரித்துவரும் முரண்பாடுகளினால் 45 பேர்  உயிரிழந்துள்ளனர். 

கடந்த 2023ஆம் ஆண்டு மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் காரணமாக 488 யானைகள் உயிரிழந்துள்ளன. 

இதேவேளை, 184 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

நாட்டில் ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழப்பு  நாட்டில் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதல்கள் மற்றும் விபத்துக்களால் கடந்த ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.அதில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 28 யானைகளும், மின்சாரம் தாக்கி 21 யானைகளும், ஹக்க பட்டாசுகளினால் 13 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 2 யானைகளும், ரயில் விபத்தால் 3 யானைகளும், வீதி விபத்தினால் ஒரு யானையும், நீரில் அடித்துச் சென்று 7 யானைகளும், ஏனைய விபத்துக்களால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் வயதுடையவை ஆகும். இதேவேளை, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அதிகரித்துவரும் முரண்பாடுகளினால் 45 பேர்  உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டு மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் காரணமாக 488 யானைகள் உயிரிழந்துள்ளன. இதேவேளை, 184 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement