• Nov 26 2024

24 மணித்தியாலங்களில் சிக்கிய 1,554 பேர்...! வெளியான காரணம்...!samugammedia

Sharmi / Dec 30th 2023, 2:35 pm
image

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கைகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 84 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் இருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது பொலிஸாரின் செயற்பாடுகளால் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தவறையும் செய்யாவிடின், பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கலாம்.

ஒட்டுமொத்த நாட்டையும் பீடித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று தெரிவித்தார்.

24 மணித்தியாலங்களில் சிக்கிய 1,554 பேர். வெளியான காரணம்.samugammedia நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கைகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் 84 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன், கைதானவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் இருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன்போது பொலிஸாரின் செயற்பாடுகளால் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எந்தவொரு தவறையும் செய்யாவிடின், பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கலாம்.ஒட்டுமொத்த நாட்டையும் பீடித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement