• Apr 16 2025

தேர்தல் சட்டங்களை மீறிய 16 வேட்பாளர்கள் கைது!

Chithra / Apr 15th 2025, 12:19 pm
image

 

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 130 முறைப்பாடுகளும்,

தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்களும் 57 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறிய 16 வேட்பாளர்கள் கைது  2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 130 முறைப்பாடுகளும்,தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்களும் 57 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement