• Apr 16 2025

உயர் வெப்பநிலையால் மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து; அதிக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தல்

Chithra / Apr 15th 2025, 12:15 pm
image


நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கின்றது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும்   உயர் வெப்பநிலை அதிகமாக இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனித உடலை நீண்ட நேரம் வெப்பத்தில் வெளிப்படுத்துவது நீரிழப்பு, தசைச் சிதைவு, அதிகப்படியான சோர்வு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும், 

வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடுமையான வெப்பநிலை தொடர்ந்தால், பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், கடுமையான செயல்பாடுகளை குறைக்கவும், நிழலான பகுதிகளில் தங்கவும் திணைக்களம் அறிவுறுத்துகிறது.


உயர் வெப்பநிலையால் மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து; அதிக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தல் நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கின்றது.குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும்   உயர் வெப்பநிலை அதிகமாக இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.மனித உடலை நீண்ட நேரம் வெப்பத்தில் வெளிப்படுத்துவது நீரிழப்பு, தசைச் சிதைவு, அதிகப்படியான சோர்வு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதுபோன்ற கடுமையான வெப்பநிலை தொடர்ந்தால், பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், கடுமையான செயல்பாடுகளை குறைக்கவும், நிழலான பகுதிகளில் தங்கவும் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

Advertisement

Advertisement

Advertisement