• Nov 22 2024

160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் நாட்டின் பல பகுதிகளிலும் அனுஸ்டிப்பு...!

Sharmi / Mar 21st 2024, 3:57 pm
image

160 ஆவது பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வுகள் திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமன் சிகேரா தலைமையில் திருமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில்,  போரின் போது காயமடைந்த அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், மாவீரர் நினைவிடத்தில் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் வீரர்களின் உறவினர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


வவுனியாவில் 160வது பொலிஸ் வீரர்கள் தினம் 

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று(21) காலை 7.30 மணியளவில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவு கூரப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவு தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது

இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் , வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.







160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் நாட்டின் பல பகுதிகளிலும் அனுஸ்டிப்பு. 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வுகள் திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமன் சிகேரா தலைமையில் திருமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.இந் நிகழ்வில்,  போரின் போது காயமடைந்த அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், மாவீரர் நினைவிடத்தில் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் வீரர்களின் உறவினர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.வவுனியாவில் 160வது பொலிஸ் வீரர்கள் தினம் வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று(21) காலை 7.30 மணியளவில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவு கூரப்பட்டு வருகின்றனர்.வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவு தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றதுஇந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் , வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement