• May 09 2024

பிளேக் நோய் அபாயத்தில் 17 மாகாணங்கள்.!அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு..!samugammedia

Sharmi / Jun 28th 2023, 10:12 am
image

Advertisement

மங்கோலியாவில்,  புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை அளிக்கா விடில் 24 மணி நேரத்திற்குள் மரணத்தை சம்பவிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில், இந்த வைரஸ்  கொறித்து உண்ணும் விலங்குகளிடம் காணப்படுவதால் அந்த நாட்டில்  அணில் வகையை சேர்ந்த மர்மோஸ் என்ற விலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும் பலர் அவற்றை  சட்ட விரோதமாக வேட்டையாடி உட்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சூழலில், அந்நாட்டில்  பிளேக் நோய் அறிகுறியுடன் பலர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த அடிப்படையில், அங்குள்ள 17 மாகாணங்கள் பிளேக் நோய் அபாயத்தில் உள்ளதாக நோய்களுக்கான தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,  பிளேக் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட கோவி அல்டாய் என்ற மாகாணத்தை தனிமைப்படுத்தி அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளேக் நோய் அபாயத்தில் 17 மாகாணங்கள்.அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு.samugammedia மங்கோலியாவில்,  புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை அளிக்கா விடில் 24 மணி நேரத்திற்குள் மரணத்தை சம்பவிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில், இந்த வைரஸ்  கொறித்து உண்ணும் விலங்குகளிடம் காணப்படுவதால் அந்த நாட்டில்  அணில் வகையை சேர்ந்த மர்மோஸ் என்ற விலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும் பலர் அவற்றை  சட்ட விரோதமாக வேட்டையாடி உட்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சூழலில், அந்நாட்டில்  பிளேக் நோய் அறிகுறியுடன் பலர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த அடிப்படையில், அங்குள்ள 17 மாகாணங்கள் பிளேக் நோய் அபாயத்தில் உள்ளதாக நோய்களுக்கான தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,  பிளேக் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட கோவி அல்டாய் என்ற மாகாணத்தை தனிமைப்படுத்தி அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement