• May 17 2024

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக அழைத்து செல்லப்பட்ட 19 வங்கதேச நாட்டவர்கள் தாய்லாந்தில் கைது...!samugammedia

Sharmi / Jun 24th 2023, 11:02 am
image

Advertisement

தாய்லாந்தின் தெற்கு மாகாணத்தில் உள்ள Bang Klam மாவட்டத்தில் இடைமறிக்கப்பட்ட ஐந்து கார்களில் ஆவணங்களின்றி இருந்த 19 வங்கதேச குடியேறிகளும் அவர்களை அழைத்து சென்ற 4 தாய்லாந்து நாட்டவர்களும் தாய்லாந்து குடிவரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு ஆவணங்களற்ற குடியேறிகளை கடத்துவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து இக்கைது நடந்துள்ளது.

கம்போடியாவுக்கு விமானம் வழியாக சென்று அங்கிருந்து தாய்லாந்து எல்லைக்குள் வங்கதேச குடியேறிகள் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.  மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறிய முகவர்கள் ஒவ்வொரு குடியேறியிடமும் தலா 1.10 லட்சம் தாய்லாந்து பட் (இந்திய மதிப்பில் 2.50 லட்சம் ரூபாய்) பெற்றிருக்கின்றனர்.

தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 4 தாய்லாந்து நாட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வங்கதேச குடியேறிகள் Bang Klam காவல்துறையினரிடம் ஒப்படைப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் வங்கதேசத்துக்கு நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக அழைத்து செல்லப்பட்ட 19 வங்கதேச நாட்டவர்கள் தாய்லாந்தில் கைது.samugammedia தாய்லாந்தின் தெற்கு மாகாணத்தில் உள்ள Bang Klam மாவட்டத்தில் இடைமறிக்கப்பட்ட ஐந்து கார்களில் ஆவணங்களின்றி இருந்த 19 வங்கதேச குடியேறிகளும் அவர்களை அழைத்து சென்ற 4 தாய்லாந்து நாட்டவர்களும் தாய்லாந்து குடிவரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு ஆவணங்களற்ற குடியேறிகளை கடத்துவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து இக்கைது நடந்துள்ளது. கம்போடியாவுக்கு விமானம் வழியாக சென்று அங்கிருந்து தாய்லாந்து எல்லைக்குள் வங்கதேச குடியேறிகள் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.  மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறிய முகவர்கள் ஒவ்வொரு குடியேறியிடமும் தலா 1.10 லட்சம் தாய்லாந்து பட் (இந்திய மதிப்பில் 2.50 லட்சம் ரூபாய்) பெற்றிருக்கின்றனர். தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 4 தாய்லாந்து நாட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வங்கதேச குடியேறிகள் Bang Klam காவல்துறையினரிடம் ஒப்படைப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் வங்கதேசத்துக்கு நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement