• Apr 01 2025

யாழில் கைது செய்யப்பட்ட 190 பேர்..! - மருத்துவ பரிசோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 26th 2023, 12:48 pm
image

 

யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 190 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர்களை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர். 

மருத்துவ பரிசோதனை அறிக்கையின் படி 190 பேரில் 125 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில், இவர்களில் சுமார் 25 பேரை நீதிமன்றங்களின் ஊடாக மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் கைது செய்யப்பட்ட 190 பேர். - மருத்துவ பரிசோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்  யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 190 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர்களை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர். மருத்துவ பரிசோதனை அறிக்கையின் படி 190 பேரில் 125 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில், இவர்களில் சுமார் 25 பேரை நீதிமன்றங்களின் ஊடாக மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement