• Nov 28 2024

தேர்தல் செலவு விபரங்களை சமர்ப்பித்த 20 வேட்பாளர்கள்

Chithra / Oct 13th 2024, 4:57 pm
image

  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 20 பேர் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி எஞ்சிய வேட்பாளர்கள் தங்களது செலவு அறிக்கையை இன்று வழங்குவார்கள் என ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இதன்படி குறித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

தேர்தல் செலவு விபரங்களை சமர்ப்பித்த 20 வேட்பாளர்கள்   கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 20 பேர் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எஞ்சிய வேட்பாளர்கள் தங்களது செலவு அறிக்கையை இன்று வழங்குவார்கள் என ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி குறித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement