• Nov 26 2024

ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது!

Chithra / Oct 9th 2024, 11:53 am
image

 

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், 332 யுஎஸ்பி கேபிள்கள், 17 ரவுட்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையில் ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளுடன் இந்தக் குழுவுக்கு தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை (06) 30 சீன பிரஜைகள், 04 இந்திய பிரஜைகள் மற்றும் 06 தாய்லாந்து பிரஜைகள் உட்பட 40 வெளிநாட்டு பிரஜைகள் ஹன்வெல்லவில் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், இந்த வாரம் திங்கட்கிழமை (07) மேலும் 19 சீன பிரஜைகள் நாவலவில் கைது செய்யப்பட்டனர்.

ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது  ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்களிடம் இருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், 332 யுஎஸ்பி கேபிள்கள், 17 ரவுட்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.இலங்கையில் ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளுடன் இந்தக் குழுவுக்கு தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.ஞாயிற்றுக்கிழமை (06) 30 சீன பிரஜைகள், 04 இந்திய பிரஜைகள் மற்றும் 06 தாய்லாந்து பிரஜைகள் உட்பட 40 வெளிநாட்டு பிரஜைகள் ஹன்வெல்லவில் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.அதன் பின்னர், இந்த வாரம் திங்கட்கிழமை (07) மேலும் 19 சீன பிரஜைகள் நாவலவில் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement