• Jul 13 2025

சீனித் தொழிற்சாலையின் 2000 ஏக்கர் நிலம் சோளச்செய்கைக்கு கையளிப்பு...!

shanuja / Jun 11th 2025, 4:38 pm
image


கந்தளாய் பகுதியில் மிக நீண்ட காலமாக பயிர்ச்செய்கைக்கு  உட்படுத்தப்படாது,  கைவிடப்பட்ட நிலையில் இருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோளச் செய்கைக்காக  விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வு கந்தளாய் சீனித் தொழிற்சாலை வளாகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமந்த குமார தலைமையில்  இன்று (11) நடைபெற்றது.


சோளப் பயிர்செய்கைக்கான  காணி அனுமதிப்பத்திரம் விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவினால்  விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


 நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான்  அக்மீமன ஆகியோர் கலந்துகொண்டனர்.

சீனித் தொழிற்சாலையின் 2000 ஏக்கர் நிலம் சோளச்செய்கைக்கு கையளிப்பு. கந்தளாய் பகுதியில் மிக நீண்ட காலமாக பயிர்ச்செய்கைக்கு  உட்படுத்தப்படாது,  கைவிடப்பட்ட நிலையில் இருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோளச் செய்கைக்காக  விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.இந்த நிகழ்வு கந்தளாய் சீனித் தொழிற்சாலை வளாகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமந்த குமார தலைமையில்  இன்று (11) நடைபெற்றது.சோளப் பயிர்செய்கைக்கான  காணி அனுமதிப்பத்திரம் விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவினால்  விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான்  அக்மீமன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now