• Nov 22 2024

இலங்கையில் 2000 பேருக்கு அரச வேலை வாய்ப்பு..! 4000 பேருக்கு அழைப்பு

Chithra / Feb 27th 2024, 12:38 pm
image

 

நாடளாவிய ரீதியில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்த்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கிராம உத்தியோகஸ்த்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகளானது பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற 4000 பேரை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.  

நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள், சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையினால் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.  

சிலர் பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் பல வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ப்ரதீப் யசரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.  

இலங்கையில் 2000 பேருக்கு அரச வேலை வாய்ப்பு. 4000 பேருக்கு அழைப்பு  நாடளாவிய ரீதியில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்த்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த கிராம உத்தியோகஸ்த்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகளானது பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற 4000 பேரை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.  நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள், சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையினால் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.  சிலர் பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் பல வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ப்ரதீப் யசரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement