• Dec 28 2024

ஆழிப்பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் விசேட ஆத்ம சாந்தி பூஜைகள்..!

Sharmi / Dec 26th 2024, 2:50 pm
image

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(26) மட்டக்களப்பின் பல பகுதிகளிலும்  இடம்பெற்றது.

இலங்கையில் மிக உயரமான சுனாமி நினைவு தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட கிராமம் என்ற நிலையில் உள்ள மட்டக்களப்பு நாவலடி சுனாமி தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுனாமி நினைவு தூபியில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது விசேட ஆத்மசாந்தி பூஜைகள் நடைபெற்றதுடன் உயிர்நீர்த்த உறவுகளினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாவலடி கடற்கரையில் ஆத்ம சாந்திக்காக விசேடபூஜைகள் நடைபெற்று தமது உறவுகளின் ஆத்ம சாந்திக்கான வழிபாடுகளும் கிரியைகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜோசப்மேரி,க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பூ.பிரசாந்தன்,இரா.துரைரெட்னம்,முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வூர்வுமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




ஆழிப்பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் விசேட ஆத்ம சாந்தி பூஜைகள். சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(26) மட்டக்களப்பின் பல பகுதிகளிலும்  இடம்பெற்றது.இலங்கையில் மிக உயரமான சுனாமி நினைவு தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட கிராமம் என்ற நிலையில் உள்ள மட்டக்களப்பு நாவலடி சுனாமி தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுனாமி நினைவு தூபியில் நிகழ்வுகள் நடைபெற்றன.இதன்போது விசேட ஆத்மசாந்தி பூஜைகள் நடைபெற்றதுடன் உயிர்நீர்த்த உறவுகளினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நாவலடி கடற்கரையில் ஆத்ம சாந்திக்காக விசேடபூஜைகள் நடைபெற்று தமது உறவுகளின் ஆத்ம சாந்திக்கான வழிபாடுகளும் கிரியைகளும் நடைபெற்றன.இந்த நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜோசப்மேரி,க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பூ.பிரசாந்தன்,இரா.துரைரெட்னம்,முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதேபோன்று மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வூர்வுமாக நடைபெற்றது.மட்டக்களப்பு நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement