வவுனியா- கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவாக விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன்று (26) இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் அகிலாண்டேஸ்வரர் ஆலயதர்மகர்த்தா சபையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இறந்தவர்களிற்கு ஆத்ம சாந்தி வேண்டி நெய் தீபம் ஏற்றப்பட்டு மோட்ச வழிபாடும் இடம்பெற்றது.
இதில் அந்தணச் சிவாச்சாரியார்கள், ஆலய தர்மகர்த்தா சபையினர், ஆலய பகத்தர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மோட்ச வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் : சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக வழிபாடும் அஞ்சலியும் வவுனியா- கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவாக விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன்று (26) இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் அகிலாண்டேஸ்வரர் ஆலயதர்மகர்த்தா சபையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இறந்தவர்களிற்கு ஆத்ம சாந்தி வேண்டி நெய் தீபம் ஏற்றப்பட்டு மோட்ச வழிபாடும் இடம்பெற்றது. இதில் அந்தணச் சிவாச்சாரியார்கள், ஆலய தர்மகர்த்தா சபையினர், ஆலய பகத்தர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மோட்ச வழிபாட்டில் ஈடுபட்டனர்.