• Nov 19 2024

தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 22 பேர் கைது

Anaath / Sep 5th 2024, 12:42 pm
image

நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறிய  22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் காவல் துறைக்கு பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடு, தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் என வகைப்படுத்துகிறோம். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான 119 முறைப்பாடுகள் குற்றவியல் தன்மை கொண்ட 54 முறைப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 22 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு 4 தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.” எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 22 பேர் கைது நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறிய  22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் காவல் துறைக்கு பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடு, தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் என வகைப்படுத்துகிறோம். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான 119 முறைப்பாடுகள் குற்றவியல் தன்மை கொண்ட 54 முறைப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 22 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு 4 தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.” எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement