• Dec 09 2024

எல்லை தாண்டி மீன் பிடித்த 25 தமிழக மீனவர்கள் யாழில் கைது..!விடுவிக்க கோரி கடலில் இறங்கி போராடும் பாம்பன் மீனவர்கள்...!

Sharmi / Jul 1st 2024, 11:26 am
image

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை  கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்திய தமிழ்நாடு பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றினை இன்று(01) காலை முன்னெடுத்தனர்.

அதேவேளை,  கைது செய்யப்பட்ட மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி, பாம்பன் சாலை பாலத்தில் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். 

மீனவர்களின் வீதி மறியல் போராட்டத்தால் மதுரை, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேவேளை, கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்குமாறு கோரி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீனவர்கள் கடலில் இறங்கி குறித்த மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை  தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

அதேவேளை, வயிற்று பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்ற மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் இதன்போது கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்த 25 தமிழக மீனவர்கள் யாழில் கைது.விடுவிக்க கோரி கடலில் இறங்கி போராடும் பாம்பன் மீனவர்கள். எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை  கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்திய தமிழ்நாடு பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றினை இன்று(01) காலை முன்னெடுத்தனர்.அதேவேளை,  கைது செய்யப்பட்ட மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி, பாம்பன் சாலை பாலத்தில் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். மீனவர்களின் வீதி மறியல் போராட்டத்தால் மதுரை, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதேவேளை, கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்குமாறு கோரி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீனவர்கள் கடலில் இறங்கி குறித்த மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை  தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.அதேவேளை, வயிற்று பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்ற மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் இதன்போது கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement