• Jan 11 2025

மட்டக்களப்பில் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தின நிகழ்வு

Tharmini / Jan 5th 2025, 2:24 pm
image

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஓய்வு நிலை அதிபர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுச்சுடர் தேசிய அமைப்பாளரால் ஏற்றப்பட்டதுடன் கட்சி உறுப்பினர்களினாலும் பொதுமக்களினாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மசாந்திக்காக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுகள் என்னும் தலைப்பிலும் சமகால அரசியல் நிலைமைகளும் தமிழ் தேசிய அரசியலும் என்னும் தலைப்பில் தேசிய அமைப்பாளராலும் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது உரையாற்றிய அவர், மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் இலங்கையை பொறுத்த அளவில் இலங்கை தீவை மையப்படுத்தி ஒரு பூகோள அரசியல் ஆதிக்க போட்டி நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது.

அந்த பூகோள அரசியல் போட்டியில் எங்களுடைய தமிழ் மக்கள் சிக்குண்டு இந்த சிங்கள தேசத்தினால் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் எமது மக்களுக்காக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருந்த வேளையில் எங்களுடைய அந்த போராட்டம் என்பது ஒரு பயங்கரவாத போராட்டம் என உலகத்திற்கு இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் அந்த ஆட்சியாளர்களும் ஒரு பிழையான பிம்பத்தை இந்த சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறி வந்திருந்தனர்.

அந்த நிலையில் எங்களுடைய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் இலங்கையினுடைய தலைநகர் கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான ஒரு போராட்டம் எங்களுடைய தமிழ் மக்களை பாதுகாப்பாதற்காகத்தான் இந்த இளைஞர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி இருக்கின்றார்கள் என்கின்ற நியாயப்பாட்டை உலகத்திற்கு எடுத்துக் கூறினார்.

அந்தக் காலப்பகுதியில் 2000 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் காலம் அவருடன் தான் இவர் படித்தார் அவ்வாறு படித்த ஒரு பெரிய மாமனிதர். மிகவும் தமிழ் மக்களுக்காகவோ அல்லது வேறு தரப்புக்காக இல்லாது நீதிக்காக குரல் கொடுக்கின்ற ஒருவர். அந்த அடிப்படையில் தான் அவர்கள் எங்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான போராட்டம் என்பதனை சர்வதேசத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலேயே அந்த சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் சந்திரிகாவினால் கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷனுக்கு முன்னால் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார.; இது உலகத்தில் இருக்கின்ற அனைத்து விதமான மனித நேய அமைப்புகளுக்கும் மிக முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தூதுவர்களுக்கும் நாட்டினுடைய மிக முக்கியமான தலைவர்களுக்கும் தெரியும்.

இன்று இந்த நாட்டை மையப்படுத்தி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது தணியவில்லை. ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும் எங்களுக்கான இனத்துக்கான விடுதலை போராட்டம் இன்னமும் மௌனிக்கவில்லை. இதனை எமது மக்கள் அனைவரும் நன்கு அறிய வேண்டும்.

புலம்பெயர்ந்த மக்கள் எமது மக்களின் விடுதலைக்காக மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள தேசம் ஒரு கனவு கண்டிருக்கின்றது 2009 உடன் எல்லாம் முடிந்து விட்டது என்று. ஆனால் அவ்வாறு இல்லை எங்களுடைய போராட்டம் எழுச்சி பெற்று இருக்கின்றது.

புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற இளையவர்கள் இன்றும் எமது விடுதலைக்காக தாயகத்தில் இருக்கின்ற எமது தமிழ் மக்களது விடுதலைக்காக அவர்கள் எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கு சென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இன்று இந்த நாட்டில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றம் என்பது அவர்கள் ஊழல் ஒழிப்போம் என்பதன் அடிப்படையில் அவர்கள் வந்திருக்கின்றார்கள.

இவர்கள் ஏற்கனவே தமிழ் மக்கள் மீது மிக மோசமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக செயற்பட்டவர்கள். இங்கு வந்திருக்கின்ற அனுர அரசு என்பது அவர்கள் ஜே.வி.பியின் முகம். இவர்கள் அரசியல் ரீதியாக வந்து ஜே.வி.பி ஆனால் நடைமுறையில் என்.பி.பி யாக இருக்கின்றார்கள்.

ஆகவே அரசியல் ரீதியான ஆதிக்கம் தான் இங்கு அதிகமாக காணப்படுகின்றது. அவர்களது அரசியல் என்பது ஒட்டுமொத்த நாடும் ஒரு சிங்கள தேச நாடு பௌத்த நாடு இதனை நாங்கள் கட்டாயம் சிங்கள மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதன் அடிப்படையில் தான் அவர்கள் தென்பகுதியில் வேலை செய்திருக்கின்றார்கள்.

இவர்கள் இன்றும் தென்பகுதி மக்களுடன் கதைக்கும் போது தாங்கள் சொல்வதை தமிழ் மக்கள் கேட்காவிட்டால் ஆயுத ரீதியாக ஆயுதம் தூக்கி அவர்களை அடக்குவோம் என்று பல கூட்டங்களில் தென்பகுதியில் கூறியிருக்கின்றார்கள்.

இன்று தலைவராக இருக்கின்ற அனுமார திசாநாயக்க அவர்தான் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக சர்வதேச சமூகங்கள் முன்வந்த நிலையில் இலங்கையில் இருந்த இந்த இராணுவத்தினர் எமது விடுதலை இயக்கத்தினால் அடி வாங்கி தளர்வு நிலையில் இருந்த போது தென்பகுதியில் இளைஞர்களை சேர்த்து 50,000 இராணுவ வீரர்களை கொடுத்து மக்களை இனப்படுகொலை செய்ததில் மிக முக்கியமான நபர் இவர்.

நாங்கள் மறுபடியும் கூறுகின்றோம் எங்களுடைய மாமனிதர்கள் செய்த தியாகங்கள் நீங்கள் சாதாரணமாக யோசித்து விடக்கூடாது. இந்த இனம் வாழுவதற்காக எத்தனையோ மகான்களை நாங்கள் கொடுத்திருக்கின்றோம்.

இன்று இந்த அரசு வடக்கு கிழக்கில் பெருமளவு ஆசனங்களை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள் இலங்கை முழுவதுமாக 159 ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தை பெற்றிருக்கின்றார்கள்.

அவர்களுடைய பார்வையில் மட்டக்களப்பு மாத்திரம் தான் விடுபட்டுள்ளது என்பதன் அடிப்படையில் அனுமார திசாநாயக்கவின் கதைகள் இருக்கின்றது.

எங்களைப் பொறுத்தளவில் மக்கள் இந்த அரசியல் நிலைப்பாட்டில் மிகவும் தெளிவடைய வேண்டும. எங்களுடைய மக்கள் தமிழ் தேசியத்திலிருந்து ஒரு நாளும் விடுபடவில்லை.

யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்கள் என்.பி.பி க்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது என்றால் அது ஏற்கனவே டக்லஸ் தேவானந்தா மற்றும் அங்கஜனுக்கும் அரசாங்கத்துடன் இருந்தவர்கள். அந்த வாக்குகள் ஒரு கட்சிக்கு சென்றதனால் தான் மூன்று ஆசனங்கள் அங்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது.

ஆகவே தமிழ் தேசியத்துடன் தான் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இருக்கின்றார்கள். அதில் எந்த தயக்கமும் கிடையாது.

அதே போன்று மட்டக்களப்பிலும் தமிழ் தேசியத்திற்கு அதாவது சைக்கிளுக்கும் அல்லது வீட்டிற்கும் வாக்களிக்கும் நிலைப்பாட்டில் தான் மக்கள் இருந்தார்கள். வாக்குகள் பிரிந்திடும் என்கின்ற அடிப்படையில் சிலர் குழப்பினாலும் இன்று தமிழ் தேசியம் வென்று இருக்கின்றது.

ஆனால் இந்த இடத்தில் மக்கள் மிக நிதானமாக இருக்க வேண்டும். நாங்கள் ஆசாபாசங்களுக்கு முகம் கொடுக்கக் கூடாது. நாங்கள் அந்த சலுகைகள் மாட்டி விடக்கூடாது.

இந்த மண்ணில் அனேக படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. எமது முதலாவது மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா. அதனைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் நமது மண்ணின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்ட எத்தனையோ எழுத்தாளர்கள் இங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். கடத்தப்பட்டிருக்கின்றார்கள், காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அண்மையில் கூட எக்னெலியகொட எனப்படுகின்ற தென்பகுதி ஊடகவியலாளர் ஒருவரை கடத்திக்கொண்டு மட்டக்களப்பில் வைத்து அவரை படுகொலை செய்து பெரிய களம் எனப்படுகின்ற எருமை தீவு பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழ் புதைத்து வைத்திருப்பதாக வெளிநாட்டில் இருக்கின்ற ஒரு முன்னாள் கடற்படை பிரதானி கூறி இருக்கின்றார்.

இவ்வாறு பல படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் முன்னர் பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் எமது மக்களை கடத்திக் கொண்றிருக்கின்றார்கள். இந்த உண்மைகள் கட்டாயமாக வெளியே வரும்.

நேற்றைய முன்தினம் முன்னாள் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக இருந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். ஏன் கைது செய்யப்பட்டிருக்கின்றார் அவரின் வீட்டின் முன்னால் ஒரு சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் அதில் மாற்று கருத்து கிடையாது. அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்.

ஆனால் தமிழ் மக்களின் மீது ஏறிக்கொண்டு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை நசுக்கிக் கொண்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்த விதத்திலும் அனுமதிக்காது. எங்கிருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆகுவோம்.

எமது மக்கள் எங்களை தோற்கடித்தாலும் இன்று வீதியில் இருந்து போராடுகின்றோம் என்றால் எங்களுக்கு பதவிகள் அதில் இருக்கின்ற சலுகைகள் முக்கியமில்லை. இந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கின்றது. அந்த அரசியல் நிலைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.

நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஊடகங்களில் எமது தலைவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியத்துடன் நிற்கின்ற கட்சிகளை அழைத்து இருக்கின்றோம். நாங்கள் எமது மக்களுக்கு ஒரு ஆபத்து நிகழப் போகின்றது.

வரலாற்றிலே தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு அதனை நிறைவேற்றுவதற்கான சதிகள் இடம்பெறுகின்றது. அந்த சதி திட்டத்தை முறியடிப்பதற்காக குறைந்தபட்சம் நீங்கள் அத்தனை கட்சிகளும் அது வீட்டு கட்சியாக இருக்கலாம், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களாய் இருக்கலாம் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றாக வந்து அதனை முறியடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம்.

இந்த அழைப்பினை நாங்கள் விட்டிருக்கின்றோம். அத்தோடு பல தலைவர்களை எமது தலைவர் சந்தித்திருக்கின்றார். நேற்றைக்கு முன் தினம் கூட இந்த விடயங்களை கூறி இருக்கின்றோம் வாருங்கள் ஒன்றாக கூடி எமது மக்களின் நலன்களுக்காக தயவுசெய்து ஒன்றாகக்கூடி நாங்கள் முறியடிப்போம் என்று.

எங்களைப் பொறுத்தளவில் எமது மக்கள் நலன்களை விட்டுவிட்டு முன்னோக்கி செல்ல முடியாது. நாங்கள் இந்த மக்களுக்காக தொடர்ந்து எமது அரசியல் பயணத்தை மேற்கொள்ளுவோம். எமது மாவட்டத்தில் அதாவது மட்டக்களப்பு என்பதற்கு அப்பால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு துரோகங்களை செய்து கொண்டு ஏகப்பட்ட பண மோசடிகளை செய்து கொண்டு வந்த நபர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டு இருக்கின்றார்கள். அது உங்களுக்கு அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் கூட 760 மில்லியன் ரூபா பணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென வரப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டு இருக்கின்றது. அதற்கான எதுவித ஆதாரங்களும் இல்லை. அதாவது ஒப்பந்தக்காரர்களுக்கு பணத்தினை வழங்காமல் மோசடி செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கான விசாரணைகள் இடம் பெறப் போகின்றது.

ஆகவே இவை தெரிந்தது தெரியாமல் எத்தனையோ மோசடிகள் இடம் பெற்றிருக்கின்றது. ஆகவே மக்களுடைய பணங்களை சுருட்டிக்கொண்டு மக்களுக்கான காரியங்களை செய்யாமல் அங்கும் இங்கும் கொஞ்சமாக கிள்ளி போட்டு விட்டு மக்களை ஏமாற்றி வந்தவர்களை இந்த முறை சரியான பாடத்தை எமது மக்கள் கற்பித்து இருக்கின்றார்கள்.

இந்த இடத்தில் மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள்.

ஆகவே நீங்கள் பாரபட்சம் பார்க்காமல் தமிழ் தேசியத்திற்கு பின்னால் நிற்க வேண்டும். தமிழ் தேசியத்தை நாங்கள் கட்டி எழுப்ப வேண்டும். எமது வடக்கு கிழக்கு தமிழர்களது தாயகம் சிங்கள தேசம் கனவு காணலாம். ஒரு போதும் தமிழ் மக்களது இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது. அது ஒரு பகல் கனவாகவே இருக்கும்.

இந்த ஊழல் விவகாரம் எல்லா இடங்களிலும் புற்றுநோயாக பரவி இருப்பதாக அனுமார் திசாநாயக்க கூறி இருக்கின்றார். ஏனென்றால் இந்த ஆட்சியை குழப்பப்படுகின்றது. உங்கள் அனைவருக்கும் தெரியும.; ஊழல் ஒழிக்கப்பட்டாலும்.

அவர்களது கொள்கையில் இருக்கின்ற திணைக்கள தலைவர்கள் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த அடிப்படையில் இவர்களுக்கு இவற்றை கொண்டு நடத்துவது கஷ்டம்.

ஆகவே எங்களைப் பொறுத்தளவில் இந்தியா, சீனா போன்ற ஏனைய நாடுகளும் சேர்ந்து இந்த நாட்டை வைத்து பூகோள அரசியல் ரீதியாக தங்களது ஆதிக்கத்துக்கான போட்டியினை மேற்கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் தமிழர்கள் நிதானமாக இருந்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.

இதில் தமிழ் தலைவர்கள் தங்களுடைய பதவிகளுக்காக செயற்படக் கூடாது. தங்களது நலனுக்காக செயற்படக்கூடாது. எமது மக்களது நலனுக்காக செயற்பட வேண்டும். இவற்றைத்தான் அப்போதிருந்து இப்போது வரை நாங்கள் கூறிக் கொண்டிருக்கின்றோம்.

இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிற்கும் வெளியுறவு கொள்கைகள் இருக்கின்றது. அந்த வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு இலங்கையினை தன்னுடைய கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக பல ஒப்பந்தங்களை செய்வதற்கு எத்தனை இருக்கின்றது. இருந்த போதிலும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்தியா சில முன்மொழிவுகளை வைத்திருக்கின்றது.

இந்த இரு நாட்டிற்கு இடையில் ஒரு பாலம் போட வேண்டும் மின்சார இணைப்புகளை செய்ய வேண்டும் அதேபோன்று எரிபொருளினை குழாய் ரீதியாக இணைத்து அவற்றை செய்ய வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்படவில்லை என்றால் இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு.

இவற்றைப் பொறுத்தளவில் தமிழர்களுக்கு எது வித தயக்கமும் இல்லை இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் தமிழ் மக்களது இன பிரச்சினைக்கான தீர்வினை இந்தியா செய்யுமாக இருந்தால் 100வீதம் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வோம்.

இந்தியாவை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் நாங்கள் செல்ல மாட்டோம். வடகிழக்கில் சீனா உட்பட எந்த நாட்டிற்கும் இடமில்லை. இந்தியாவுக்கு மாத்திரம்தான் தமிழர்கள் அனுமதிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தான் இந்த நாட்டை பாதுகாக்க கூடிய அத்தனை வல்லமையும் கொண்டிருக்கக் கூடிய ஒரு சக்தி. அவர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள்.

ஆகவே இந்தியா இந்த விடயங்களை கவனமாக கையாண்டு எமது மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கான தீர்வை காண வேண்டும். ஒரு நீண்ட காலம் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சினை இந்தியாவின் கையில் இந்த நாடு சிக்கி 4.5மில்லியன் அமெரிக்க  டொலர் கடன் பெற்று இருக்கின்றது. இந்த நாடு இந்தியாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றது.

ஆகவே இந்தியாவின் கைக்குள் தான் இலங்கை இருக்கின்றது இந்தியா மிக இலகுவாக இந்த நாட்டை இந்த நாட்டினுடைய தலைவரை இலகுவாக கொண்டு வரலாம் இலகுவாக வெளியில் தூக்கி மறியலாம்.

அந்த அடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன் நின்று செயல்பட வேண்டும்.

அதற்காக இங்கு இருக்கின்ற அனைத்து தமிழ் தலைவர்களும் இந்த விடயத்தை ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும் என்பதனை நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.





மட்டக்களப்பில் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தின நிகழ்வு தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.ஓய்வு நிலை அதிபர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது நினைவுச்சுடர் தேசிய அமைப்பாளரால் ஏற்றப்பட்டதுடன் கட்சி உறுப்பினர்களினாலும் பொதுமக்களினாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மசாந்திக்காக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுகள் என்னும் தலைப்பிலும் சமகால அரசியல் நிலைமைகளும் தமிழ் தேசிய அரசியலும் என்னும் தலைப்பில் தேசிய அமைப்பாளராலும் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.இதன்போது உரையாற்றிய அவர், மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் இலங்கையை பொறுத்த அளவில் இலங்கை தீவை மையப்படுத்தி ஒரு பூகோள அரசியல் ஆதிக்க போட்டி நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. அந்த பூகோள அரசியல் போட்டியில் எங்களுடைய தமிழ் மக்கள் சிக்குண்டு இந்த சிங்கள தேசத்தினால் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் எமது மக்களுக்காக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருந்த வேளையில் எங்களுடைய அந்த போராட்டம் என்பது ஒரு பயங்கரவாத போராட்டம் என உலகத்திற்கு இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் அந்த ஆட்சியாளர்களும் ஒரு பிழையான பிம்பத்தை இந்த சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறி வந்திருந்தனர்.அந்த நிலையில் எங்களுடைய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் இலங்கையினுடைய தலைநகர் கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான ஒரு போராட்டம் எங்களுடைய தமிழ் மக்களை பாதுகாப்பாதற்காகத்தான் இந்த இளைஞர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி இருக்கின்றார்கள் என்கின்ற நியாயப்பாட்டை உலகத்திற்கு எடுத்துக் கூறினார்.அந்தக் காலப்பகுதியில் 2000 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் காலம் அவருடன் தான் இவர் படித்தார் அவ்வாறு படித்த ஒரு பெரிய மாமனிதர். மிகவும் தமிழ் மக்களுக்காகவோ அல்லது வேறு தரப்புக்காக இல்லாது நீதிக்காக குரல் கொடுக்கின்ற ஒருவர். அந்த அடிப்படையில் தான் அவர்கள் எங்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான போராட்டம் என்பதனை சர்வதேசத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலேயே அந்த சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் சந்திரிகாவினால் கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷனுக்கு முன்னால் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார.; இது உலகத்தில் இருக்கின்ற அனைத்து விதமான மனித நேய அமைப்புகளுக்கும் மிக முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தூதுவர்களுக்கும் நாட்டினுடைய மிக முக்கியமான தலைவர்களுக்கும் தெரியும்.இன்று இந்த நாட்டை மையப்படுத்தி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது தணியவில்லை. ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும் எங்களுக்கான இனத்துக்கான விடுதலை போராட்டம் இன்னமும் மௌனிக்கவில்லை. இதனை எமது மக்கள் அனைவரும் நன்கு அறிய வேண்டும்.புலம்பெயர்ந்த மக்கள் எமது மக்களின் விடுதலைக்காக மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள தேசம் ஒரு கனவு கண்டிருக்கின்றது 2009 உடன் எல்லாம் முடிந்து விட்டது என்று. ஆனால் அவ்வாறு இல்லை எங்களுடைய போராட்டம் எழுச்சி பெற்று இருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற இளையவர்கள் இன்றும் எமது விடுதலைக்காக தாயகத்தில் இருக்கின்ற எமது தமிழ் மக்களது விடுதலைக்காக அவர்கள் எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கு சென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இன்று இந்த நாட்டில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றம் என்பது அவர்கள் ஊழல் ஒழிப்போம் என்பதன் அடிப்படையில் அவர்கள் வந்திருக்கின்றார்கள.இவர்கள் ஏற்கனவே தமிழ் மக்கள் மீது மிக மோசமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக செயற்பட்டவர்கள். இங்கு வந்திருக்கின்ற அனுர அரசு என்பது அவர்கள் ஜே.வி.பியின் முகம். இவர்கள் அரசியல் ரீதியாக வந்து ஜே.வி.பி ஆனால் நடைமுறையில் என்.பி.பி யாக இருக்கின்றார்கள்.ஆகவே அரசியல் ரீதியான ஆதிக்கம் தான் இங்கு அதிகமாக காணப்படுகின்றது. அவர்களது அரசியல் என்பது ஒட்டுமொத்த நாடும் ஒரு சிங்கள தேச நாடு பௌத்த நாடு இதனை நாங்கள் கட்டாயம் சிங்கள மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதன் அடிப்படையில் தான் அவர்கள் தென்பகுதியில் வேலை செய்திருக்கின்றார்கள்.இவர்கள் இன்றும் தென்பகுதி மக்களுடன் கதைக்கும் போது தாங்கள் சொல்வதை தமிழ் மக்கள் கேட்காவிட்டால் ஆயுத ரீதியாக ஆயுதம் தூக்கி அவர்களை அடக்குவோம் என்று பல கூட்டங்களில் தென்பகுதியில் கூறியிருக்கின்றார்கள்.இன்று தலைவராக இருக்கின்ற அனுமார திசாநாயக்க அவர்தான் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக சர்வதேச சமூகங்கள் முன்வந்த நிலையில் இலங்கையில் இருந்த இந்த இராணுவத்தினர் எமது விடுதலை இயக்கத்தினால் அடி வாங்கி தளர்வு நிலையில் இருந்த போது தென்பகுதியில் இளைஞர்களை சேர்த்து 50,000 இராணுவ வீரர்களை கொடுத்து மக்களை இனப்படுகொலை செய்ததில் மிக முக்கியமான நபர் இவர்.நாங்கள் மறுபடியும் கூறுகின்றோம் எங்களுடைய மாமனிதர்கள் செய்த தியாகங்கள் நீங்கள் சாதாரணமாக யோசித்து விடக்கூடாது. இந்த இனம் வாழுவதற்காக எத்தனையோ மகான்களை நாங்கள் கொடுத்திருக்கின்றோம்.இன்று இந்த அரசு வடக்கு கிழக்கில் பெருமளவு ஆசனங்களை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள் இலங்கை முழுவதுமாக 159 ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தை பெற்றிருக்கின்றார்கள். அவர்களுடைய பார்வையில் மட்டக்களப்பு மாத்திரம் தான் விடுபட்டுள்ளது என்பதன் அடிப்படையில் அனுமார திசாநாயக்கவின் கதைகள் இருக்கின்றது.எங்களைப் பொறுத்தளவில் மக்கள் இந்த அரசியல் நிலைப்பாட்டில் மிகவும் தெளிவடைய வேண்டும. எங்களுடைய மக்கள் தமிழ் தேசியத்திலிருந்து ஒரு நாளும் விடுபடவில்லை. யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்கள் என்.பி.பி க்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது என்றால் அது ஏற்கனவே டக்லஸ் தேவானந்தா மற்றும் அங்கஜனுக்கும் அரசாங்கத்துடன் இருந்தவர்கள். அந்த வாக்குகள் ஒரு கட்சிக்கு சென்றதனால் தான் மூன்று ஆசனங்கள் அங்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது.ஆகவே தமிழ் தேசியத்துடன் தான் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இருக்கின்றார்கள். அதில் எந்த தயக்கமும் கிடையாது. அதே போன்று மட்டக்களப்பிலும் தமிழ் தேசியத்திற்கு அதாவது சைக்கிளுக்கும் அல்லது வீட்டிற்கும் வாக்களிக்கும் நிலைப்பாட்டில் தான் மக்கள் இருந்தார்கள். வாக்குகள் பிரிந்திடும் என்கின்ற அடிப்படையில் சிலர் குழப்பினாலும் இன்று தமிழ் தேசியம் வென்று இருக்கின்றது.ஆனால் இந்த இடத்தில் மக்கள் மிக நிதானமாக இருக்க வேண்டும். நாங்கள் ஆசாபாசங்களுக்கு முகம் கொடுக்கக் கூடாது. நாங்கள் அந்த சலுகைகள் மாட்டி விடக்கூடாது. இந்த மண்ணில் அனேக படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. எமது முதலாவது மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா. அதனைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் நமது மண்ணின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்ட எத்தனையோ எழுத்தாளர்கள் இங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். கடத்தப்பட்டிருக்கின்றார்கள், காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.அண்மையில் கூட எக்னெலியகொட எனப்படுகின்ற தென்பகுதி ஊடகவியலாளர் ஒருவரை கடத்திக்கொண்டு மட்டக்களப்பில் வைத்து அவரை படுகொலை செய்து பெரிய களம் எனப்படுகின்ற எருமை தீவு பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழ் புதைத்து வைத்திருப்பதாக வெளிநாட்டில் இருக்கின்ற ஒரு முன்னாள் கடற்படை பிரதானி கூறி இருக்கின்றார்.இவ்வாறு பல படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் முன்னர் பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் எமது மக்களை கடத்திக் கொண்றிருக்கின்றார்கள். இந்த உண்மைகள் கட்டாயமாக வெளியே வரும்.நேற்றைய முன்தினம் முன்னாள் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக இருந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். ஏன் கைது செய்யப்பட்டிருக்கின்றார் அவரின் வீட்டின் முன்னால் ஒரு சூட்டு சம்பவம் இடம்பெற்றது.உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் அதில் மாற்று கருத்து கிடையாது. அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். ஆனால் தமிழ் மக்களின் மீது ஏறிக்கொண்டு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை நசுக்கிக் கொண்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்த விதத்திலும் அனுமதிக்காது. எங்கிருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆகுவோம்.எமது மக்கள் எங்களை தோற்கடித்தாலும் இன்று வீதியில் இருந்து போராடுகின்றோம் என்றால் எங்களுக்கு பதவிகள் அதில் இருக்கின்ற சலுகைகள் முக்கியமில்லை. இந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கின்றது. அந்த அரசியல் நிலைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஊடகங்களில் எமது தலைவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியத்துடன் நிற்கின்ற கட்சிகளை அழைத்து இருக்கின்றோம். நாங்கள் எமது மக்களுக்கு ஒரு ஆபத்து நிகழப் போகின்றது. வரலாற்றிலே தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு அதனை நிறைவேற்றுவதற்கான சதிகள் இடம்பெறுகின்றது. அந்த சதி திட்டத்தை முறியடிப்பதற்காக குறைந்தபட்சம் நீங்கள் அத்தனை கட்சிகளும் அது வீட்டு கட்சியாக இருக்கலாம், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களாய் இருக்கலாம் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றாக வந்து அதனை முறியடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம்.இந்த அழைப்பினை நாங்கள் விட்டிருக்கின்றோம். அத்தோடு பல தலைவர்களை எமது தலைவர் சந்தித்திருக்கின்றார். நேற்றைக்கு முன் தினம் கூட இந்த விடயங்களை கூறி இருக்கின்றோம் வாருங்கள் ஒன்றாக கூடி எமது மக்களின் நலன்களுக்காக தயவுசெய்து ஒன்றாகக்கூடி நாங்கள் முறியடிப்போம் என்று.எங்களைப் பொறுத்தளவில் எமது மக்கள் நலன்களை விட்டுவிட்டு முன்னோக்கி செல்ல முடியாது. நாங்கள் இந்த மக்களுக்காக தொடர்ந்து எமது அரசியல் பயணத்தை மேற்கொள்ளுவோம். எமது மாவட்டத்தில் அதாவது மட்டக்களப்பு என்பதற்கு அப்பால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு துரோகங்களை செய்து கொண்டு ஏகப்பட்ட பண மோசடிகளை செய்து கொண்டு வந்த நபர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டு இருக்கின்றார்கள். அது உங்களுக்கு அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் கூட 760 மில்லியன் ரூபா பணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென வரப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டு இருக்கின்றது. அதற்கான எதுவித ஆதாரங்களும் இல்லை. அதாவது ஒப்பந்தக்காரர்களுக்கு பணத்தினை வழங்காமல் மோசடி செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கான விசாரணைகள் இடம் பெறப் போகின்றது.ஆகவே இவை தெரிந்தது தெரியாமல் எத்தனையோ மோசடிகள் இடம் பெற்றிருக்கின்றது. ஆகவே மக்களுடைய பணங்களை சுருட்டிக்கொண்டு மக்களுக்கான காரியங்களை செய்யாமல் அங்கும் இங்கும் கொஞ்சமாக கிள்ளி போட்டு விட்டு மக்களை ஏமாற்றி வந்தவர்களை இந்த முறை சரியான பாடத்தை எமது மக்கள் கற்பித்து இருக்கின்றார்கள்.இந்த இடத்தில் மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள்.ஆகவே நீங்கள் பாரபட்சம் பார்க்காமல் தமிழ் தேசியத்திற்கு பின்னால் நிற்க வேண்டும். தமிழ் தேசியத்தை நாங்கள் கட்டி எழுப்ப வேண்டும். எமது வடக்கு கிழக்கு தமிழர்களது தாயகம் சிங்கள தேசம் கனவு காணலாம். ஒரு போதும் தமிழ் மக்களது இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது. அது ஒரு பகல் கனவாகவே இருக்கும்.இந்த ஊழல் விவகாரம் எல்லா இடங்களிலும் புற்றுநோயாக பரவி இருப்பதாக அனுமார் திசாநாயக்க கூறி இருக்கின்றார். ஏனென்றால் இந்த ஆட்சியை குழப்பப்படுகின்றது. உங்கள் அனைவருக்கும் தெரியும.; ஊழல் ஒழிக்கப்பட்டாலும். அவர்களது கொள்கையில் இருக்கின்ற திணைக்கள தலைவர்கள் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த அடிப்படையில் இவர்களுக்கு இவற்றை கொண்டு நடத்துவது கஷ்டம்.ஆகவே எங்களைப் பொறுத்தளவில் இந்தியா, சீனா போன்ற ஏனைய நாடுகளும் சேர்ந்து இந்த நாட்டை வைத்து பூகோள அரசியல் ரீதியாக தங்களது ஆதிக்கத்துக்கான போட்டியினை மேற்கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் தமிழர்கள் நிதானமாக இருந்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.இதில் தமிழ் தலைவர்கள் தங்களுடைய பதவிகளுக்காக செயற்படக் கூடாது. தங்களது நலனுக்காக செயற்படக்கூடாது. எமது மக்களது நலனுக்காக செயற்பட வேண்டும். இவற்றைத்தான் அப்போதிருந்து இப்போது வரை நாங்கள் கூறிக் கொண்டிருக்கின்றோம்.இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிற்கும் வெளியுறவு கொள்கைகள் இருக்கின்றது. அந்த வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு இலங்கையினை தன்னுடைய கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக பல ஒப்பந்தங்களை செய்வதற்கு எத்தனை இருக்கின்றது. இருந்த போதிலும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்தியா சில முன்மொழிவுகளை வைத்திருக்கின்றது.இந்த இரு நாட்டிற்கு இடையில் ஒரு பாலம் போட வேண்டும் மின்சார இணைப்புகளை செய்ய வேண்டும் அதேபோன்று எரிபொருளினை குழாய் ரீதியாக இணைத்து அவற்றை செய்ய வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்படவில்லை என்றால் இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு. இவற்றைப் பொறுத்தளவில் தமிழர்களுக்கு எது வித தயக்கமும் இல்லை இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மக்களது இன பிரச்சினைக்கான தீர்வினை இந்தியா செய்யுமாக இருந்தால் 100வீதம் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வோம்.இந்தியாவை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் நாங்கள் செல்ல மாட்டோம். வடகிழக்கில் சீனா உட்பட எந்த நாட்டிற்கும் இடமில்லை. இந்தியாவுக்கு மாத்திரம்தான் தமிழர்கள் அனுமதிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தான் இந்த நாட்டை பாதுகாக்க கூடிய அத்தனை வல்லமையும் கொண்டிருக்கக் கூடிய ஒரு சக்தி. அவர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள்.ஆகவே இந்தியா இந்த விடயங்களை கவனமாக கையாண்டு எமது மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கான தீர்வை காண வேண்டும். ஒரு நீண்ட காலம் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சினை இந்தியாவின் கையில் இந்த நாடு சிக்கி 4.5மில்லியன் அமெரிக்க  டொலர் கடன் பெற்று இருக்கின்றது. இந்த நாடு இந்தியாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றது.ஆகவே இந்தியாவின் கைக்குள் தான் இலங்கை இருக்கின்றது இந்தியா மிக இலகுவாக இந்த நாட்டை இந்த நாட்டினுடைய தலைவரை இலகுவாக கொண்டு வரலாம் இலகுவாக வெளியில் தூக்கி மறியலாம். அந்த அடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன் நின்று செயல்பட வேண்டும். அதற்காக இங்கு இருக்கின்ற அனைத்து தமிழ் தலைவர்களும் இந்த விடயத்தை ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும் என்பதனை நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

Advertisement

Advertisement

Advertisement