• May 08 2024

27 வெளிநாட்டவர்கள் ருமேனியாவில் கைது!!

crownson / Dec 28th 2022, 11:08 am
image

Advertisement

இலங்கை, பாகிஸ்தான், எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர் ருமேனியாவின் அராட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ஹங்கேரிக்கு செல்லும் நோக்கில் புடவைத் துணிகள் மற்றும் உலோக கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு கனரக வாகனத்துக்குள் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ருமேனியாவின் நட்லாக் எல்லையில் கனரக வாகனமொன்று பொலிஸாரால் சோதனையிடப்பட்டது.

அதில், சரக்கு கொள்கலனின் முன் பகுதியில் இருந்த ஒரு சிறப்பு பெட்டியில், மறைந்திருந்த 17 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்கள் மேலதிக விசாரணைக்காக அராட் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் 21 முதல் 67 வயதுடைய பங்களாதேஷ் மற்றும் எரித்திரிய நாட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டது.

இதேவேளை, பொலிஸாரால் உலோகக் கம்பிகள் ஏற்பட்ட மற்றுமொரு கனரக வாகனம் சோதனையிடப்பட்டது.

அதன்போது, அதில் மறைந்திருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 – 42 வயதுக்கு இடைப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருமேனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 வெளிநாட்டவர்கள் ருமேனியாவில் கைது இலங்கை, பாகிஸ்தான், எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர் ருமேனியாவின் அராட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அவர்கள் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ஹங்கேரிக்கு செல்லும் நோக்கில் புடவைத் துணிகள் மற்றும் உலோக கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு கனரக வாகனத்துக்குள் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.ருமேனியாவின் நட்லாக் எல்லையில் கனரக வாகனமொன்று பொலிஸாரால் சோதனையிடப்பட்டது. அதில், சரக்கு கொள்கலனின் முன் பகுதியில் இருந்த ஒரு சிறப்பு பெட்டியில், மறைந்திருந்த 17 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.அவர்கள் மேலதிக விசாரணைக்காக அராட் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவர்கள் 21 முதல் 67 வயதுடைய பங்களாதேஷ் மற்றும் எரித்திரிய நாட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டது.இதேவேளை, பொலிஸாரால் உலோகக் கம்பிகள் ஏற்பட்ட மற்றுமொரு கனரக வாகனம் சோதனையிடப்பட்டது. அதன்போது, அதில் மறைந்திருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 – 42 வயதுக்கு இடைப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருமேனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement