சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு தம்மை அவமானப்படுத்துவதை நிறுத்துமாறு கோரி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று தனிப்பட்ட வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் பிரிவு 24 இன் படி இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பவும், சமூக ஊடக விமர்சனம் மேலும் பரவுவதைத் தடுக்கவும் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான தனிப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
சமூக ஊடகங்களில் தன்னை அவமதித்துப் பதிவு: வழக்குத் தொடர்ந்தார் இராணுவத் தளபதி சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு தம்மை அவமானப்படுத்துவதை நிறுத்துமாறு கோரி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று தனிப்பட்ட வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.2024 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் பிரிவு 24 இன் படி இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பவும், சமூக ஊடக விமர்சனம் மேலும் பரவுவதைத் தடுக்கவும் கோரப்பட்டுள்ளது.இது தொடர்பான தனிப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.