• May 20 2024

மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதிகள் - 32 யுவதிகள் உட்பட 39 பேர் கைது! samugammedia

Chithra / Jun 17th 2023, 6:36 am
image

Advertisement

கல்கிஸை, மாலம்பே, கடுவெல மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாக நடத்தப்பட்ட 7 விபசார நிலையங்களைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 32 யுவதிகள் உட்பட 39 பேர் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிக்கிய 7 நிலையங்களுக்கும் உரிமம் இல்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரவு வேளைகளில் திறக்கப்படும் இந்த நிலையங்கள் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தொடர் தகவலின் அடிப்படையில் நீதிமன்றங்களில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான சுற்றிவளைப்பில் 7 பொலிஸ் குழுக்கள் பங்கேற்றுள்ளதுடன், பொலிஸ் முகவர்கள் ஊடாக குறித்த இடங்களை விபசார நிலையங்கள் என உறுதிப்படுத்திய பின்னரே இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தூரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும், பொருளாதார நெருக்கடி காரணமாக தெற்கில்  வேலைக்கு வந்து கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக இரவு வேளைகளில் இந்த நிலையங்களில் வேலை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதிகள் - 32 யுவதிகள் உட்பட 39 பேர் கைது samugammedia கல்கிஸை, மாலம்பே, கடுவெல மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாக நடத்தப்பட்ட 7 விபசார நிலையங்களைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.இதன்போது 32 யுவதிகள் உட்பட 39 பேர் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிக்கிய 7 நிலையங்களுக்கும் உரிமம் இல்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இரவு வேளைகளில் திறக்கப்படும் இந்த நிலையங்கள் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தொடர் தகவலின் அடிப்படையில் நீதிமன்றங்களில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான சுற்றிவளைப்பில் 7 பொலிஸ் குழுக்கள் பங்கேற்றுள்ளதுடன், பொலிஸ் முகவர்கள் ஊடாக குறித்த இடங்களை விபசார நிலையங்கள் என உறுதிப்படுத்திய பின்னரே இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தூரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும், பொருளாதார நெருக்கடி காரணமாக தெற்கில்  வேலைக்கு வந்து கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக இரவு வேளைகளில் இந்த நிலையங்களில் வேலை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement