• Mar 01 2025

ஞானச்சுடர் 326 ஆவது மலர் வெளியீடும், பல இலட்சம் உதவிகளும்

Thansita / Feb 28th 2025, 10:39 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 326 வது மலர் வெளியீடும் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கும் நிகழ்வும் இன்று காலை 28/02/2025 சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது.

இதில் வெளியீட்டுரையினை சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்  திருமதி சிந்துரா கலியுகவரதன் நிகழ்த்தினார். தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை இளைப்பாறிய ஆசிரியர் திருமதி புனிதவதி சண்முகலிங்கம் நிகழ்த்தினார். 

அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள்  வழங்கிவைக்கப்பட்டதுடன்  ஞானச்சுடர் மலருக்கான வாசகர் வட்டப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான  பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

அத்துடன் தொண்டைமானாறு  வீரகத்திப் பிள்ளை மகாவித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,ரூபா 240,000 பெறுமதியான நிழற்பிரதி இயந்திரம் ஒன்றும், சங்கானை பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,

நரம்பியல், பக்கவாத நோயாளிகளுக்கான சிகிச்சையான  இயன் மருத்துவ சேவைக்காக ஏழு மாதங்களுக்கு அதன் இரண்டு ஊழியர்களுக்கான  வேதனமாக  வழங்குவதற்கு முதல்மாத கொடுப்பனவாக  ரூபா 70,000 நிதியும்,  வழங்கிவைக்கப்பட்துடன் 

யாழ்ப்பாணம் பல்கலைக்ழக இந்துக் கற்கைகள் பீடத்தின்  கோரிக்கைக்கு அமைவாக மூன்றாவது சர்வதேச இந்து மாநாட்டிறகான நிதியாக ரூபா  100,000 வழங்கிவைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஞானச்சுடர் 326 ஆவது மலர் வெளியீடும், பல இலட்சம் உதவிகளும் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 326 வது மலர் வெளியீடும் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கும் நிகழ்வும் இன்று காலை 28/02/2025 சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது.இதில் வெளியீட்டுரையினை சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்  திருமதி சிந்துரா கலியுகவரதன் நிகழ்த்தினார். தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை இளைப்பாறிய ஆசிரியர் திருமதி புனிதவதி சண்முகலிங்கம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள்  வழங்கிவைக்கப்பட்டதுடன்  ஞானச்சுடர் மலருக்கான வாசகர் வட்டப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான  பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் தொண்டைமானாறு  வீரகத்திப் பிள்ளை மகாவித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,ரூபா 240,000 பெறுமதியான நிழற்பிரதி இயந்திரம் ஒன்றும், சங்கானை பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,நரம்பியல், பக்கவாத நோயாளிகளுக்கான சிகிச்சையான  இயன் மருத்துவ சேவைக்காக ஏழு மாதங்களுக்கு அதன் இரண்டு ஊழியர்களுக்கான  வேதனமாக  வழங்குவதற்கு முதல்மாத கொடுப்பனவாக  ரூபா 70,000 நிதியும்,  வழங்கிவைக்கப்பட்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்ழக இந்துக் கற்கைகள் பீடத்தின்  கோரிக்கைக்கு அமைவாக மூன்றாவது சர்வதேச இந்து மாநாட்டிறகான நிதியாக ரூபா  100,000 வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement