• May 03 2024

மட்டு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 2:54 pm
image

Advertisement

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமால் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக  வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்  இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சர்வதேச நீதிப்பொறிமுறையின கீழ் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரில் முதல் பெயரே இலங்கை நீதி தேவதைதான்,எமது உறவுகள் எமக்கு வேண்டும்,எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே,இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக போராடவேண்டும்?,எமக்கு நீதியான விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.








மட்டு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு.samugammedia மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமால் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக  வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்  இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது சர்வதேச நீதிப்பொறிமுறையின கீழ் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரில் முதல் பெயரே இலங்கை நீதி தேவதைதான்,எமது உறவுகள் எமக்கு வேண்டும்,எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே,இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக போராடவேண்டும்,எமக்கு நீதியான விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.அதனை தொடர்ந்து காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement