• Nov 25 2024

வாதரவத்தை படுகொலையின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு!

Tamil nila / Jun 6th 2024, 9:55 pm
image

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் யாழ்ப்பாணம் - புத்தூர் வாதரவத்தையில் இன்று (06.06.2024) மாலை இடம்பெற்றது.


1989ஆம் ஆண்டு நேற்றைய தினம் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைய தினம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இறந்தவர்களின் உறவினர்களினால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோரால் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன், 

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது.

ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசாங்கம் எவ்வித மன்னிப்பும் கோரவில்லை.

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் இல்லை 

ஆனால் தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம். என்றும் தெரிவித்திருந்தார் 

இதேவேளை படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு யுத்தத்தின் பின்னர் கடந்த 2012ம் ஆண்டளவில் இராணுவத்தினரால உடைக்கப்பட்ட நினைவு தூபியை விரைவில் அமைத்து அவர்களை நினைவுகூருவதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



வாதரவத்தை படுகொலையின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் யாழ்ப்பாணம் - புத்தூர் வாதரவத்தையில் இன்று (06.06.2024) மாலை இடம்பெற்றது.1989ஆம் ஆண்டு நேற்றைய தினம் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இன்றைய தினம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இறந்தவர்களின் உறவினர்களினால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோரால் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன், இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது.ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசாங்கம் எவ்வித மன்னிப்பும் கோரவில்லை.அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் இல்லை ஆனால் தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம். என்றும் தெரிவித்திருந்தார் இதேவேளை படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு யுத்தத்தின் பின்னர் கடந்த 2012ம் ஆண்டளவில் இராணுவத்தினரால உடைக்கப்பட்ட நினைவு தூபியை விரைவில் அமைத்து அவர்களை நினைவுகூருவதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement