நுவரெலியா மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 958 குடும்பங்களைச் சேர்ந்த 3641 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அந்த அதிகாரி,
அன்மைய நாட்களில் இப் பிரதேசங்களில் ஏற்பட்ட காற்று மற்றும் மழையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததாலும் கூரைகள் தூக்கி வீசப்பட்டதாலும் 950 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேற்படி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அந்தச் சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்துள்ளதாகவும், இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் நான்கு பாதுகாப்பான இடங்கள் அமைக்கப்பட்டு அந்த பாதுகாப்பான இடங்களில் மக்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மக்களும் அந்த பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியேறி உள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்களின் எதிர்கால தேவைகள் தொடர்பில் உரிய பிரதேச செயலகங்கள் அவதானித்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்த மழை - 3641 பேர் இடம்பெயர்வு நுவரெலியா மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 958 குடும்பங்களைச் சேர்ந்த 3641 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அந்த அதிகாரி, அன்மைய நாட்களில் இப் பிரதேசங்களில் ஏற்பட்ட காற்று மற்றும் மழையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததாலும் கூரைகள் தூக்கி வீசப்பட்டதாலும் 950 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேற்படி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அந்தச் சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்துள்ளதாகவும், இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இம்மாவட்டத்தில் நான்கு பாதுகாப்பான இடங்கள் அமைக்கப்பட்டு அந்த பாதுகாப்பான இடங்களில் மக்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மக்களும் அந்த பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியேறி உள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்களின் எதிர்கால தேவைகள் தொடர்பில் உரிய பிரதேச செயலகங்கள் அவதானித்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.