• Nov 26 2024

குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 50 உயிர்கள் பலி..! இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்

Chithra / Jun 13th 2024, 9:32 am
image

 குவைத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 40 இந்தியர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 50 பேர் வரை காயமடைந்ததாக குவைத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வந்த குறித்த கட்டடத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 190 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்தைப் பார்வையிட்ட குவைத்தின் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹாத் அல்-யூசுப் அல்-சபா குறித்த கட்டடத்தின் உரிமையாளரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கட்டடத்தின் நிர்மாணிப் பணிகளை பொறுப்பேற்றுள்ள நிறுவனம் பல விதி மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இந்நிலையில் இச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

''குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.


குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.  

இதேவேளை நடிகர்  கமல்ஹாசனும் உயிரிழந்தோருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.

பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.


குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 50 உயிர்கள் பலி. இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்  குவைத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தவர்களில் 40 இந்தியர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 50 பேர் வரை காயமடைந்ததாக குவைத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வந்த குறித்த கட்டடத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 190 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.சம்பவ இடத்தைப் பார்வையிட்ட குவைத்தின் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹாத் அல்-யூசுப் அல்-சபா குறித்த கட்டடத்தின் உரிமையாளரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.கட்டடத்தின் நிர்மாணிப் பணிகளை பொறுப்பேற்றுள்ள நிறுவனம் பல விதி மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்நிலையில் இச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,''குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.  இதேவேளை நடிகர்  கமல்ஹாசனும் உயிரிழந்தோருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Advertisement

Advertisement

Advertisement