• Nov 28 2024

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி..!

Sharmi / Oct 11th 2024, 4:16 pm
image

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.

அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 

அந்தவகையில், இம்முறை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சைக்குழுக்கள்என மொத்தமாக 51குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தது.

அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரியமுறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக எங்கள்மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த  ஜனநாயக தேசியகூட்டணி ஆகியகட்சிகளின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்தவகையில், இம்முறை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சைக்குழுக்கள்என மொத்தமாக 51குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தது. அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரியமுறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக எங்கள்மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த  ஜனநாயக தேசியகூட்டணி ஆகியகட்சிகளின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement