• Nov 23 2024

பஸ் விபத்தில் 45 ஈஸ்டர் யாத்திரீகர்கள் பரிதாப மரணம்..! - தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்

Chithra / Mar 29th 2024, 9:18 am
image

 

தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகருக்கு ஈஸ்டர் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் உள்ள பாறையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுவன் மட்டுமே உயிர் தப்பிய நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக லிம்போபோவின் போக்குவரத்து மற்றும் சமூக பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.

சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதோடு, மற்றைய உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே சிதறிக்கிடந்துள்ளன.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா  போட்ஸ்வானாவில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பஸ் விபத்தில் 45 ஈஸ்டர் யாத்திரீகர்கள் பரிதாப மரணம். - தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்  தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.தென்னாப்பிரிக்காவில் போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகருக்கு ஈஸ்டர் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் உள்ள பாறையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுவன் மட்டுமே உயிர் தப்பிய நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக லிம்போபோவின் போக்குவரத்து மற்றும் சமூக பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதோடு, மற்றைய உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே சிதறிக்கிடந்துள்ளன.இந்நிலையில், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா  போட்ஸ்வானாவில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement