• Sep 30 2024

சுத்தமான குடிநீர் பெற முடியாத நிலையில் 450 குடும்பங்கள் பாதிப்பு! SamugamMedia

Tamil nila / Mar 10th 2023, 7:13 pm
image

Advertisement

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  புன்னைநீராவி  கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள கண்ணகி நகர் எனும் கிராமத்தில் சுமார் 93 ஆம் ஆண்டு தொடக்கம்  450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்  இவர்கள் வாழ்வாதாரமாக கடல் தொழில் மற்றும்விவசாயத்தினையை வாழ்வாதாரமாக மேற்கொண்டுவரும் நிலையில்  இவர்களின் நாளாந்த தேவைக்காக பயன்படுத்தப்படும்  தண்ணீர்  சுத்தமான தண்ணீரை பெற முடியாத நிலையில் வாசித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.



மேலும் தெரிவிக்கையில் தமது பகுதிகளில் சுத்தமான  தண்ணீர் பெறக்கூடிய வகையில் மூன்று கிணறுகளே உள்ளன அதுவும், தனியார் காணியில் அமைந்துள்ளது.



இக்கிணருகளின் காலை தொடக்கம் மாலை வரை தமது அன்றாட தேவைக்காக நீரை சயிக்கில் மற்றும் சுமந்து தண்ணீரை பெருவதே"நாள்தோறும் சிலருக்கு வேலையாகவே உள்ளதாகவும் தமது கிணறுகளில் உள்ள கிணற்று  தண்ணீரை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் மஞ்சள் நிற காவியாக காட்சியளிக்கின்றது உடுபுடவைகள் கலுவும் போது  உடனே மஞ்சளாக மாறிவிடுகின்றது  இதன் காரணமாக பாடசாலை மாணவர்களின்  சிறியவர்கள் முதியவர்கள் என பலரும் குளிப்பதற்ற்கு  ஏனைய தேவைக்களுக்கு  நீரை பெற வேண்டுமாயின் அருகில் உள்ள குளங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


 இத்துடன் வயது முதிர்ந்தவர்கள் இந்த மஞ்சள் காவி நீரினையே பருகியும் தமது நாளாந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர் இதன் காரணமாக சிலர் நோய்வாய் பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது வைத்தியர்கள் சுத்தமான குடிநீரை பருக வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர் இருப்பினும் சுத்தமான குடிநீர் பெறுவது பெரும் சிரமமாக உள்ளதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எமது பகுதிக்கு கிராம சேவையாளர் ஊடாக நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது வழங்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை இன்று வரை பயன்படுத்த முடியாத நிலையில்  கிடையில் போடப்பட்டுள்ளது.



சுத்திகரிப்பு இயந்திரத்தை பொருத்துவதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது ஏனைய எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் இருந்தும் சுத்தமான நீரை பெற முடியாத நிலையில் வாழ்வதாக சிலர் கவலை தெரிவித்துள்ளார்கள் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் எமது பகுதிக்கு சுத்தமான குடிநீரை பெற்று  ஒரு நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டுமென  இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுத்தமான குடிநீர் பெற முடியாத நிலையில் 450 குடும்பங்கள் பாதிப்பு SamugamMedia கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  புன்னைநீராவி  கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள கண்ணகி நகர் எனும் கிராமத்தில் சுமார் 93 ஆம் ஆண்டு தொடக்கம்  450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்  இவர்கள் வாழ்வாதாரமாக கடல் தொழில் மற்றும்விவசாயத்தினையை வாழ்வாதாரமாக மேற்கொண்டுவரும் நிலையில்  இவர்களின் நாளாந்த தேவைக்காக பயன்படுத்தப்படும்  தண்ணீர்  சுத்தமான தண்ணீரை பெற முடியாத நிலையில் வாசித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் தெரிவிக்கையில் தமது பகுதிகளில் சுத்தமான  தண்ணீர் பெறக்கூடிய வகையில் மூன்று கிணறுகளே உள்ளன அதுவும், தனியார் காணியில் அமைந்துள்ளது.இக்கிணருகளின் காலை தொடக்கம் மாலை வரை தமது அன்றாட தேவைக்காக நீரை சயிக்கில் மற்றும் சுமந்து தண்ணீரை பெருவதே"நாள்தோறும் சிலருக்கு வேலையாகவே உள்ளதாகவும் தமது கிணறுகளில் உள்ள கிணற்று  தண்ணீரை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் மஞ்சள் நிற காவியாக காட்சியளிக்கின்றது உடுபுடவைகள் கலுவும் போது  உடனே மஞ்சளாக மாறிவிடுகின்றது  இதன் காரணமாக பாடசாலை மாணவர்களின்  சிறியவர்கள் முதியவர்கள் என பலரும் குளிப்பதற்ற்கு  ஏனைய தேவைக்களுக்கு  நீரை பெற வேண்டுமாயின் அருகில் உள்ள குளங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் வயது முதிர்ந்தவர்கள் இந்த மஞ்சள் காவி நீரினையே பருகியும் தமது நாளாந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர் இதன் காரணமாக சிலர் நோய்வாய் பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது வைத்தியர்கள் சுத்தமான குடிநீரை பருக வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர் இருப்பினும் சுத்தமான குடிநீர் பெறுவது பெரும் சிரமமாக உள்ளதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எமது பகுதிக்கு கிராம சேவையாளர் ஊடாக நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது வழங்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை இன்று வரை பயன்படுத்த முடியாத நிலையில்  கிடையில் போடப்பட்டுள்ளது.சுத்திகரிப்பு இயந்திரத்தை பொருத்துவதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது ஏனைய எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் இருந்தும் சுத்தமான நீரை பெற முடியாத நிலையில் வாழ்வதாக சிலர் கவலை தெரிவித்துள்ளார்கள் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் எமது பகுதிக்கு சுத்தமான குடிநீரை பெற்று  ஒரு நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டுமென  இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement