• Dec 06 2024

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஈ.பி.டி.பியினர் எடுத்த தீர்மானம்..!

Sharmi / Sep 30th 2024, 11:50 am
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியானது கொழும்பிலும் போட்டியிடவுள்ளது.

யாழ். தெல்லிப்பளை மாவைகலட்டி பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனவும், குறித்த தேர்தலில் வென்று தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் என நம்புவதாகவும், தேர்தலின் பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி இணைந்து செயற்படவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஈ.பி.டி.பியினர் எடுத்த தீர்மானம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியானது கொழும்பிலும் போட்டியிடவுள்ளது.யாழ். தெல்லிப்பளை மாவைகலட்டி பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனவும், குறித்த தேர்தலில் வென்று தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் என நம்புவதாகவும், தேர்தலின் பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி இணைந்து செயற்படவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement