• Nov 28 2024

புற்றுநோயைத் தடுப்பதற்காக தடுப்பூசி பெற்ற 5 மாணவிகளுக்கு ஏற்பட்ட கதி..! ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

Chithra / Oct 17th 2024, 11:07 am
image

 

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக எச்.பி.வி. தடுப்பூசி பெற்றுக் கொண்ட 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குருவத்தோட்ட வெனிவேல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும்  ஐந்து மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மில்லனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று வந்து குறித்த பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 26 மாணவிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டடுள்ளது.

இதனால், மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் ஒவ்வாமைக்கு உள்ளான மாணவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவர்களுக்கு பிரதேச வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஹொரண வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புற்றுநோயைத் தடுப்பதற்காக தடுப்பூசி பெற்ற 5 மாணவிகளுக்கு ஏற்பட்ட கதி. ஆரம்பிக்கப்பட்ட விசாரணை  களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக எச்.பி.வி. தடுப்பூசி பெற்றுக் கொண்ட 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்குருவத்தோட்ட வெனிவேல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும்  ஐந்து மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மில்லனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று வந்து குறித்த பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 26 மாணவிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசியை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டடுள்ளது.இதனால், மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் ஒவ்வாமைக்கு உள்ளான மாணவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.அவர்களுக்கு பிரதேச வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.குறித்த மாணவிகள் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஹொரண வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார்.சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement