• Nov 02 2024

ஜனாதிபதி மக்களின் அபிலாஷைகளை சிதைத்துள்ளார் - சஜித் பிரேமதாச!

Tamil nila / Nov 2nd 2024, 9:27 pm
image

Advertisement

பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதி எரிபொருள் விலை திருத்தத்தில் முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சலுகைகளை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கிய தற்போதைய ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புகளை உச்ச நிலைக்குக் கொண்டு வந்தார்.

 மின் கட்டணத்தை 66 சதவீதம் குறைக்கலாம் என்று தெரிவித்தார்.

 உணவுப்பொருட்களின் விலையையும் குறைப்பதாகக் கூறியிருந்தார்.

 ஆட்சிக்கு வந்தும் அவர் கூறியவாறு அதனைக் குறைக்கவில்லை.இவற்றைச் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவையில்லை.

 அதிக ஊழல் காரணமாகவே மின் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

 நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளை விரைவில் தம்மால் தீர்க்க முடியும் என்றும் கூறினார்.எனினும், ஆட்சிக்கு வந்து இன்று வரை அவரால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியவில்லை.

 தேர்தல் காலப்பகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை உச்சத்துக்குக் கொண்டு வந்து, இன்று ஆட்சிக்கு வந்தும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் அபிலாஷைகளை சிதைத்துள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி மக்களின் அபிலாஷைகளை சிதைத்துள்ளார் - சஜித் பிரேமதாச பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதி எரிபொருள் விலை திருத்தத்தில் முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சலுகைகளை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கிய தற்போதைய ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புகளை உச்ச நிலைக்குக் கொண்டு வந்தார். மின் கட்டணத்தை 66 சதவீதம் குறைக்கலாம் என்று தெரிவித்தார். உணவுப்பொருட்களின் விலையையும் குறைப்பதாகக் கூறியிருந்தார். ஆட்சிக்கு வந்தும் அவர் கூறியவாறு அதனைக் குறைக்கவில்லை.இவற்றைச் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவையில்லை. அதிக ஊழல் காரணமாகவே மின் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளை விரைவில் தம்மால் தீர்க்க முடியும் என்றும் கூறினார்.எனினும், ஆட்சிக்கு வந்து இன்று வரை அவரால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியவில்லை. தேர்தல் காலப்பகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை உச்சத்துக்குக் கொண்டு வந்து, இன்று ஆட்சிக்கு வந்தும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் அபிலாஷைகளை சிதைத்துள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement