• May 02 2026

புத்தளத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 5 பேர் உயிரிழப்பு! பெண் சந்தேகநபர் கைது

Chithra / Jan 6th 2026, 12:18 pm
image

 

புத்தளம் - வென்னப்புவ, மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

 

உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் உடலங்கள் வைக்கல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

 

மேலும் இருவர் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். 

 

இவர்கள் அனைவரும் சட்டவிரோத மதுபானம் அருந்தியமையாலேயே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

  

உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.


இந்தச் சட்டவிரோத மதுபான விநியோகம் அல்லது விற்பனையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 



புத்தளத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 5 பேர் உயிரிழப்பு பெண் சந்தேகநபர் கைது  புத்தளம் - வென்னப்புவ, மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் உடலங்கள் வைக்கல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  மேலும் இருவர் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் சட்டவிரோத மதுபானம் அருந்தியமையாலேயே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.   உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.இந்தச் சட்டவிரோத மதுபான விநியோகம் அல்லது விற்பனையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement