• May 20 2024

500 மில்லியன் டொலர்: இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம்! samugammedia

Chithra / Jun 27th 2023, 2:54 pm
image

Advertisement

வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது.

அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்.

உரிய நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவை.

கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 மில்லியன் டொலர் கடன் வசதியின் பின்னர் நாடு பெற்றுள்ள மிகப் பெரிய நிதி உதவி இதுவாகும்.

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, எஞ்சிய 200 மில்லியன் டொலர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

500 மில்லியன் டொலர்: இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம் samugammedia வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது.அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்.உரிய நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவை.கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 மில்லியன் டொலர் கடன் வசதியின் பின்னர் நாடு பெற்றுள்ள மிகப் பெரிய நிதி உதவி இதுவாகும்.இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி, எஞ்சிய 200 மில்லியன் டொலர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement