• Nov 27 2024

மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த மேலும் 500 புதிய பஸ்கள்! அமைச்சர் பணிப்புரை

Chithra / Jun 9th 2024, 12:14 pm
image


பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்து சேவையில் இயக்கப்படும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் 811 பேருந்துகள் மற்றும் 726 தனியார் பேருந்துகள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு பேருந்துகள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்கு ஆண்டுதோரும் 2000 மில்லியன் ரூபா ஒதுக்குகிறது.

போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாடசாலைப் பேருந்துகள் தேவைப்படுவதனால் மாணவர்களுக்காக 500 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருமானத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த மேலும் 500 புதிய பஸ்கள் அமைச்சர் பணிப்புரை பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்து சேவையில் இயக்கப்படும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபையின் 811 பேருந்துகள் மற்றும் 726 தனியார் பேருந்துகள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு பேருந்துகள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்கு ஆண்டுதோரும் 2000 மில்லியன் ரூபா ஒதுக்குகிறது.போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாடசாலைப் பேருந்துகள் தேவைப்படுவதனால் மாணவர்களுக்காக 500 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருமானத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement