• Oct 18 2024

அரச பண்ணைகளில் பன்றிகளுக்கு உணவாகும் 5000 கோழிகள்..! அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / May 25th 2023, 2:01 pm
image

Advertisement

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான கால்நடை பண்ணைகளில் சட்டவிரோதமாக கோழி குஞ்சுகளை அப்புறப்படுத்துவதை நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தப் பண்ணைகளில் மாதாந்தம் சுமார் 5000 கோழிகளை பன்றிகளுக்கு உணவளிக்கப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் கூறுகிறார்.

நாட்டின் வேலையற்ற இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த விலங்குகளை இறைச்சிக்காக கோழிப்பண்ணைகளுக்கு வழங்கும் திறன் பெற்றுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக அரசாங்க கால்நடை பண்ணையில் இருந்து மாதாந்தம் அகற்றப்படும் சேவல் குஞ்சுகளை வேலையற்ற இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச பண்ணைகளில் பன்றிகளுக்கு உணவாகும் 5000 கோழிகள். அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான கால்நடை பண்ணைகளில் சட்டவிரோதமாக கோழி குஞ்சுகளை அப்புறப்படுத்துவதை நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.இந்தப் பண்ணைகளில் மாதாந்தம் சுமார் 5000 கோழிகளை பன்றிகளுக்கு உணவளிக்கப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் கூறுகிறார்.நாட்டின் வேலையற்ற இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த விலங்குகளை இறைச்சிக்காக கோழிப்பண்ணைகளுக்கு வழங்கும் திறன் பெற்றுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதன் காரணமாக அரசாங்க கால்நடை பண்ணையில் இருந்து மாதாந்தம் அகற்றப்படும் சேவல் குஞ்சுகளை வேலையற்ற இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement