• Jan 09 2025

மது போதையில் வாகனங்களை செலுத்திய 509 சாரதிகள் கைது!

Chithra / Jan 2nd 2025, 2:40 pm
image


நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (ஜனவரி மாதம் 01ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 02 ஆம் திகதி காலை 06.00 மணி வரை) மது போதையில் வாகனங்களை செலுத்தியதாக கூறப்படும் 509 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 5,415 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மது போதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 509 சாரதிகளும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 29 சாரதிகளும், 

அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 59 சாரதிகளும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 345 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 4,473 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனங்களை செலுத்திய 509 சாரதிகள் கைது நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (ஜனவரி மாதம் 01ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 02 ஆம் திகதி காலை 06.00 மணி வரை) மது போதையில் வாகனங்களை செலுத்தியதாக கூறப்படும் 509 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 5,415 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, மது போதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 509 சாரதிகளும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 29 சாரதிகளும், அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 59 சாரதிகளும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 345 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 4,473 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement