வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் 54 நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற நீதவான்கள் 54 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களின் தேவைகளின் அடிப்படையிலேயே இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கடுவெல, பூகொட, மாரவில, களுத்துறை, மாத்தளை, எல்பிட்டிய, மொணராகலை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஹோமாகம, நீர்கொழும்பு, பண்டாரவளை, நுவரெலியா, மட்டக்களப்பு, கேகாலை, எல்பிட்டிய, பலப்பிட்டிய, மெதவாச்சி, நொச்சிகம, நாவுல, ஆனமடுவ, அகுனகொலபலஸ்ஸ மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய நீதவான்களுக்கும் இம்முறை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 நீதிபதிகளுக்கு இடமாற்றம். வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் 54 நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில், எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற நீதவான்கள் 54 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சில பிரதேசங்களின் தேவைகளின் அடிப்படையிலேயே இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.அந்தவகையில், கடுவெல, பூகொட, மாரவில, களுத்துறை, மாத்தளை, எல்பிட்டிய, மொணராகலை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் ஹோமாகம, நீர்கொழும்பு, பண்டாரவளை, நுவரெலியா, மட்டக்களப்பு, கேகாலை, எல்பிட்டிய, பலப்பிட்டிய, மெதவாச்சி, நொச்சிகம, நாவுல, ஆனமடுவ, அகுனகொலபலஸ்ஸ மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய நீதவான்களுக்கும் இம்முறை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.