• May 17 2024

திருமலையில் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்க 6 பேருக்கு தடை...!samugammedia

Sharmi / Sep 26th 2023, 10:28 am
image

Advertisement

திலீபனின் நினைவு நாளை இன்றைய தினம் (26) திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவிருந்த நிலையில் திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

திருகோணமலை துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜே.எஸ்.ரணவீரவால் 1979ம் ஆண்டு 15ம் இலக்க 106/1 என்ற நிபந்தனைக்கு அமைவாக திருகோணமலை நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட குறித்த அமைப்பின்  உறுப்பினரான திலீபனின் நினைவு இன்றைய நாள் கொண்டாடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் முரண்பாடுகள் ஏற்படலாம் என பொலிஸார்  ஐந்து அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு நீதிமன்றின்  கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரஸ்ஸாக்  துறைமுக பொலிஸார் வழங்கிய அறிக்கையை கவனித்துக் கொண்டு திலீபனின் நினைவு நாள் அனுஷ்டிபதற்கு தடை உத்தரவு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர். எம்.ஜெரோம் மற்றும் ரமேஷ் நிக்கலஸ் உட்பட ஆறு பேருக்கு தடை உத்தரவு வழங்கி வைத்தனர்.

திருமலையில் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்க 6 பேருக்கு தடை.samugammedia திலீபனின் நினைவு நாளை இன்றைய தினம் (26) திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவிருந்த நிலையில் திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.திருகோணமலை துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜே.எஸ்.ரணவீரவால் 1979ம் ஆண்டு 15ம் இலக்க 106/1 என்ற நிபந்தனைக்கு அமைவாக திருகோணமலை நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.தடை செய்யப்பட்ட குறித்த அமைப்பின்  உறுப்பினரான திலீபனின் நினைவு இன்றைய நாள் கொண்டாடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் முரண்பாடுகள் ஏற்படலாம் என பொலிஸார்  ஐந்து அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு நீதிமன்றின்  கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரஸ்ஸாக்  துறைமுக பொலிஸார் வழங்கிய அறிக்கையை கவனித்துக் கொண்டு திலீபனின் நினைவு நாள் அனுஷ்டிபதற்கு தடை உத்தரவு வழங்கியுள்ளார்.இந்நிலையில் திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர். எம்.ஜெரோம் மற்றும் ரமேஷ் நிக்கலஸ் உட்பட ஆறு பேருக்கு தடை உத்தரவு வழங்கி வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement