• Oct 30 2024

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் பரிதாப மரணம்!

Tamil nila / Oct 27th 2024, 7:55 am
image

Advertisement

கம்பஹா, வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று அத்தனகல்ல பொலிஸார்  தெரிவித்தனர்.

வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மேற்படி சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ் பகுதியில் கையை வைத்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கிக் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர்,  சிறுவனின் தந்தை உடனடியாகச் சிறுவனை வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சேர்த்தபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை வதுபிட்டிவல வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் அத்தனகல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் பரிதாப மரணம் கம்பஹா, வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று அத்தனகல்ல பொலிஸார்  தெரிவித்தனர்.வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,மேற்படி சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ் பகுதியில் கையை வைத்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கிக் கீழே மயங்கி விழுந்துள்ளார்.பின்னர்,  சிறுவனின் தந்தை உடனடியாகச் சிறுவனை வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சேர்த்தபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை வதுபிட்டிவல வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.இது தொடர்பில் அத்தனகல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement